மோடி எங்கள் குடும்பத்தில் ஒருவர்... லதா ரஜினிகாந்த் பெருமிதம்
சென்னை: மோடி எங்களை கவுரவபடுத்தி விட்டார், அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர் எனத் தெரிவித்துள்ளார் லதா ரஜினிகாந்த்.
தேர்தல் பிரச்சாரப் பணிக்காக கடந்த 13ம் தேதி சென்னை வந்த பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான மோடி போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்.
அது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை, வெறும் நட்பு ரீதியான சந்திப்பு என ஏற்கனவே ரஜினி தரப்பில் விளக்கமளிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் மோடி எங்கள் குடும்பத்தில் ஒருவர் என தெரிவித்துள்ளார் லதா ரஜினிகாந்த்.
இது தொடர்பாக பத்திரிக்கை ஒன்றிற்கு லதா ரஜினிகாந்த் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது :-

ரஜினியின் நண்பர்.....
நரேந்திரமோடி ரஜினியின் மிக நெருங்கிய நண்பராவார். ரஜினிகாந்த் உடல் நலம் இல்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்தபோது மோடி நேரில் வந்து பார்த்தார். இப்போது அவர் எங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து எங்களை சந்தித்தது உள்ளார்.

எங்கள் குடும்பத்தில் ஒருவர்...
இதனால் நாங்கள் அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதுகிறோம். அவர் எங்கள் வீட்டுக்கு வந்து எங்களை கவுரவபடுத்தி விட்டார்' என்றார்.

திட்டமிட்ட செயல் இல்லை...
மேலும், 24-ந் தேதி ஓட்டு பதிவின்போது ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லாமேரி கல்லூரியில் முதல் ஆளாக சென்று ஓட்டு போட்டது பற்றிக் கூறுகையில், ‘‘ரஜினி முதல் ஆளாக சென்று ஓட்டுபோட்டதற்கு எந்த திட்டமும் இல்லை.

தற்செயலானது...
அவர் எப்போதும் காலையிலே சென்று காத்திருந்து ஓட்டு போடுவார். அன்றும் அதேபோல் முன்கூட்டி சென்றார். அவர் முதல் ஓட்டு போடும் நிலை ஏற்பட்டது. ஆனால் அது தற்செயலாக நடந்தது'' எனத் தெரிவித்துள்ளார்.

சிறப்பான தருணம்...
அதேபோல், கோச்சடையான் படம் வெளியாவதில் எல்லாமே நல்லபடியாக சென்று கொண்டிருப்பதாக கூறிய லதா ரஜினிகாந்த், ‘தான் முதல் நாளில் முதல் காட்சியை ரசிகர்களோடு அமர்ந்து பார்க்க உள்ளதாகவும், அது தனக்கு சிறப்பான தருணம்' எனவும் கூறியுள்ளார்.
-
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications