கன்னியாகுமரி அருகே கள்ளக்காதலியின் மகளை பலாத்காரம் செய்ய முயன்ற கயவன் மீது புகார்
கன்னியாகுமரி அருகே கள்ளக்காதலியின் மகளை பலாத்காரம் செய்ய முயன்ற நபர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே கள்ளக்காதலியின் 19 வயதை மகளை பலாத்காரம் செய்ய முயன்ற ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண் புகார் அளித்துள்ளார்.
சாமிதோப்பு செட்டிவிளையை சேர்ந்தவர் தர்மர் (36). கட்டட ஒப்பந்ததாரராக உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளனர். இந்த நிலையில் இவருக்கு வடக்கு தாமரைகுளம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் பின்னர் கள்ளக்காதலாக மாறியது. கடந்த சில ஆண்டுகளாக தர்மர் கள்ளக்காதலியின் வீட்டிலேயே தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. கள்ளக்காதலிக்கு 19 வயது மகள் உள்ளார்.

கணவன் -மனைவி போல்
நர்சிங் படித்துள்ள அவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிக்கு சென்றுவந்தார். அந்த பெண் தன்னுடன் பணியாற்றும் அசாம் மாநில இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒரே வீட்டில் கணவன்- மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர்.

சந்திக்க விருப்பம்
இந்நிலையில் அந்த இளைஞருடன் அந்த பெண் பழகுவதை தர்மர் கண்டித்தார். எனினும் அதை பொருட்படுத்தாமல் அவருடன் அந்த பெண் தொடர்பில் இருந்தார். கடந்த 23-ஆம் தேதி அசாம் வாலிபரை சந்திக்க விரும்புவதாக கூறிய தர்மர் அந்த பெண்ணுடன் நிறுவனத்துக்கு சென்றார்.

தலைமறைவு
அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து தர்மர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து எப்படியோ தர்மரிடம் இருந்து தப்பி வந்த அந்த பெண், மகளிர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து தர்மரை தேடி போலீஸார் சென்ற போது அவர் தலைமறைவாகிவிட்டார்.

காதலன் மாயம்
இதனிடையே அந்த பெண்ணை காதலித்த அசாம் இளைஞரும் மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications