போட்டோவா எடுக்குறீங்க, போட்டோ.. மொத்தபேரையும் தெறிக்க விட்ட பச்சிளம் குழந்தை.. வைரல் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: போட்டோவா எடுக்கிறீர்கள், இந்தா வாங்கிக்கோங்க என்று சொல்லாமல் சொல்லிவிட்டது இந்த பச்சிளம் குழந்தை. ஆனால், அதை வாயால் சொல்லியிருந்தால் பரவாயில்லை.. பிறகு எப்படி சொல்லியது? என்ற வினா எழுகிறதா? இதை பாருங்கள்.

பிறந்த குழந்தையை சிறப்பாக போட்டோ எடுப்பதில் பெயர் பெற்ற பிரபல போட்டோகிராபர் அனா பிரான்ட் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார். அதில் தாயை நிறுத்தி வைத்து குழந்தையை ஆடையின்றி கையில் கொடுத்து போட்டோ எடுக்க முயலுகிறார்.

Mom Poses With Baby For Photoshoot But Baby Did Shit

வாயில் வைத்துள்ள நிப்பிளை அவர் அட்ஜஸ்ட் செய்தபோது, திடீரென ப்புளிச் என்ற சத்தத்தோடு அந்த குழந்தை 'ஆய்' இருந்துவிட்டது. அது தாய் மீது பட்டு தெறித்தது.

அதிர்ச்சியடைந்த புகைப்பட உதவியாளர்கள், டிஷ்யூ பேப்பர் வைத்து சுத்தம் செய்தனர். மீண்டும், ரெடி, ஸ்டார்ட் என போட்டோ எடுக்க தயாரான அனாவுக்கும், குழந்தையின் தாயாருக்கும் மீண்டும் அதிர்ச்சி. இப்போது இன்னும் கொஞ்சம் ஃபோர்சாகவே ஆய் இருந்து அறை முழுக்க தெறிக்கவிட்டது குழந்தை.

இந்த வீடியோ சிரிப்பை வரவழைப்பதாக உள்ளதால் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Newborn and pregnancy photographer Ana Brandt has shared an adorable video showing what really goes behind the scenes.
Please Wait while comments are loading...