ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் ’தொப்பி’ சின்னத்துக்கு கடும் போட்டி : தினகரனுக்கு இதிலும் சிக்கல் ?
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்திற்கு கடும் போட்டி எழுந்துள்ளது.
சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்திற்கு கடும் போட்டி எழுந்துள்ளது. இதனால், டி.டி.வி தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது. இதில் போட்டியிட தி.மு.க சார்பில் மருதுகணேஷ், அ.தி.மு.க சார்பில் மதுசூதனன், பா.ஜ.க சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் ஆகியோர் மனுத்தாக்கல் செய்து இருந்தனர்.

சுயேச்சை வேட்பாளர்களாக டி.டி.வி தினகரன், நடிகர் விஷால், தீபா ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று நடந்த வேட்புமனு பரிசீலனையில் தீபா, விஷால் உள்ளிட்ட பல சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், இதுவரை 72 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் நிலையில் தொப்பி சின்னம் யாருக்கு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆர்.கே நகரில் போட்டியிடும் சுயேச்சைகளில் தினகரன் உட்பட 30 பேர் தொப்பி சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்து உள்ளனர். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே சின்னத்தை கேட்கும்போது, குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும்.
ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட தேர்தலில் டி.டி.வி தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிட பிரச்சாரம் மேற்கொண்டதால் இந்த முறை அந்த சின்னம் கிடைத்தால் பிரச்சாரம் எளிதாக இருக்கும் என்பதாலேயே பலரும் அந்த சின்னத்தை கேட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், தொப்பி சின்னத்தை தனக்கு ஒதுக்க வேண்டும் என்கிற டி.டி.வி தினகரன் வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதால், இந்த முறை தொப்பி சின்னம் கிடைப்பதில் தினகரனுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications