இறந்த நிலையில் 50க்கும் மேற்பட்ட மயில்கள் மீட்பு.. மதுரை அருகே பரபரப்பு.. விஷம் கொடுக்கப்பட்டதா?
Recommended Video

மதுரை: மதுரை அருகே விஷம் கொடுத்து மயில்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தங்குடி அருகே உள்ளது மருதங்குளம். இங்கு ஏகப்பட்ட மயில்கள் வலம் வருவது வழக்கம். காரணம் இப்பகுதி மிகவும் எழில் கொஞ்சும் இயற்கை சூழலைக் கொண்டது. தோப்புகள், வயல்கள் என பார்க்கவே ரம்மியமாக இருக்கும். நீர் நிலைகளும் நிறைய உள்ளன.

ஆனால் இந்த மயில்களால் இப்பகுதியில் உள்ள சிலருக்கு அசவுகரியம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று காலை ஏகப்பட்ட மயில்கள் இறந்து கிடந்ததைப் பார்த்து மயில்களுக்கு தீவனம் போட வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வனத்துறையினருக்கும், போலீஸாருக்கும் தகவல் பறந்தது. அனைவரும் விரைந்து வந்தனர்.
50க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்திருந்தது தெரிய வந்தது. அவற்றை வனத்துறையினர் மீட்டனர். இந்த மயில்கள் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மயில்கள் இறந்து கிடந்த இடத்தில் ஏராளமான நெல் பரவிக் கிடந்தது. அதில் விஷம் கலந்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து அவற்றை கைப்பற்றி சோதனைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். தேசியப் பறவையான மயில் இப்படிக் கூட்டம் கூட்டமாக பிணமாக கண்டெடுக்கப்பட்டது மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications