வத்தலகுண்டில் அதிர்ச்சி.. மூக்கு உடைந்த பெண்ணிற்கு தையல் போட்ட பிணவறை ஊழியர்!
Recommended Video

திண்டுக்கல்: வத்தலகுண்டின் அருகே மூக்கு உடைந்த பெண்ணிற்கு பிணவறை ஊழியர் தையல் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக மருத்துவமனையில் பணிபுரியும் உதவியாளர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது அதிகரித்து வருகிறது.
மருத்துவமனை துப்புரவு தொழிலாளர்கள், மருத்துவமனை உதவியாளர்கள் நோயாளிகளுக்கு ஊசி போடுவது, தையல் போடுவது போன்ற வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி பீதியை கிளப்பி வருகிறது.

பெண்ணுக்கு தையல்
இந்நிலையில் திண்டுக்கல் அருகே அரசு மருத்துவமனையில் பிணவறை ஊழியர் ஒருவர், காயம்பட்ட பெண்ணுக்கு தையல் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிகிச்சையளிக்கும் வீடியோ
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு பிணவறை ஊழியர் சிகிச்சை அளிக்கும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனை
கொடைக்கானல் அருகே கடந்த 29-ம் தேதி நடந்த விபத்தில் வேனில் சென்ற 2 பெண்கள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற ஒருவர் அவர்களை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

பிணவறை ஊழியர் சிகிச்சை
ஆனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர், மதுரைக்கு கொண்டுசெல்லுமாறு தட்டிக் கழித்தார். இதையடுத்து வலியால் துடித்தவர்களுக்கு பிணவறை ஊழியர் கதற கதற முதலுதவி செய்தார்.

அப்பகுதி மக்கள் கோரிக்கை
பிணவறை ஊழியர் சிகிச்சை அளிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அன்றைய தினம் பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிணவறை ஊழியர் அல்ல
இதனிடையே நோயாளிக்களுக்கு சிகிச்சையளித்தவர் மருத்துவமனையின் பல்நோக்கு உதவியாளர் என்றும் அவர் பிணவறை ஊழியர் இல்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications