ஜெ. முதல்வராக அதிக (31.56%) ஆதரவு.. விஜயகாந்த்துக்கு 6.24%, அன்புமணிக்கு 2.27% ஆதரவு- லயோலா சர்வே
சென்னை: தமிழகத்தில் மீண்டும் முதல்வராக ஜெயலலிதாவுக்கு அதிகம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். அன்புமணிக்கு 2.27 சதவீதம் பேர் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக லயோலா கல்லூரி கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. தமிழகத்தின் 28 மாவட்டங்களில் 80 சட்டசபை தொகுதிகளில் கடந்த 13-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 3,320 பேரிடம் இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு ஆதரவு
இந்த கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்ட பல கேள்விகளில், முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்வி முக்கியத்துவம் வாய்ந்தது. அடுத்த முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என்ற கேள்விக்கு 31.56 சதவீதம் பேர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலின், கருணாநிதி
ஜெயலலிதாவுக்குக அடுத்தபடியாக ஸ்டாலினுக்கு 27.98% பேர் ஆதரவு அளித்துள்ளனர். ஸ்டாலினுக்கு பிறகுதான் கருணாநிதிக்கு ஆதரவு கிடைத்துள்ளது. அவருக்கு 21.33% மட்டுமே ஆதரவு கொடுத்துள்ளனர். முதல்முறையாக கருணாநிதியைவிட ஸ்டாலினுக்கு மக்கள் அதிக ஆதரவு கொடுத்துள்ளது இதில் இருந்து தெளிவாகிறது.

விஜயகாந்த்
முதல்வர் வேட்பாளர்களில் ஒருவராக அறியப்படும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு ஒற்றை இலக்க ஆதரவே கிடைத்துள்ளது. விஜயகாந்துக்கு 6.24% பேர் ஆதரவு கொடுத்துள்ளனர். இருப்பினும் திமுக, அதிமுக தவிர்த்த ஒரு கட்சியின் தலைவர் பெற்றுள்ள அதிக ஆதரவு விஜயகாந்த்தினுடையதே.

அன்புமணி
அதேநேரம், சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து முதல்வர் வேட்பாளராக அன்புமணியை அறிவித்து பிரச்சாரத்தில் இறங்கியள்ள பாமகவுக்கு இந்த கருத்துக் கணிப்பு ஏமாற்றமே. அன்புமணி முதல்வராக 2.27% பேர் மட்டுமே ஆதரவு அளித்துள்ளனர். பாமக வலுவான உள்ள பகுதிகளை தேர்ந்தெடுத்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டிருந்தால் இந்த ஆதரவு சதவீதம் அதிகரித்திருக்கும் என்கிறது கள நிலவரம்.

வைகோ, திருமா
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக கூட்டணி அமைக்க கிளம்பியுள்ள மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ் நிலைமை மிகவும் கீழே உள்ளது.
முதல்வராக வைகோவுக்கு 1.85% மக்களும், திருமாவளவனுக்கு 1.13% மக்களும், வாசனுக்கு 1% மக்களும்,
தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு 0.93% மக்களும் ஆதரவு அளித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் சீமான் முதல்வராக 0.84% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications