கமல் தனிக்கட்சி தொடங்கும் முடிவுக்கு ஒன்இந்தியாதமிழ் வாசகர்கள் அமோக ஆதரவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
தனிக்கட்சி துவங்கப்போகிறேன்.. கமல் அதிரடி பேட்டி!-வீடியோ

சென்னை: தனிக்கட்சி துவங்க நடிகர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதற்கு 'ஒன்இந்தியாதமிழ்' வாசகர்களில் பெரும்பாலானோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சமீபகாலமாக தொடர்ந்து அரசியல் கருத்துக்களை சோஷியல் மீடியாக்கள் மூலமும், பேட்டிகளின் வாயிலாகவும் தெரிவித்து வருபவர் கமல்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது கூட காரமான அரசியல் கருத்துக்களை முன் வைத்து வருகிறார். மக்கள் எல்லோருமே வாக்களித்து தங்கள் கோபத்தை உரிய நேரத்தில் காட்ட வேண்டும் என்று சூசகமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசி வருகிறார்.

அரசியல் கற்க சென்றார்

அரசியல் கற்க சென்றார்

இந்த நிலையில், கமல்ஹாசன் அரசியலில் இறங்கப்போகிறார் என்ற யூகங்கள் பல மட்டங்களில் இருந்தும் வெளியாகி வருகின்றன. அதற்கு வலு சேர்க்கும் வகையில், கமல் சமீபத்தில் கேரளாவுக்கு சென்று அதன் முதல்வர் பினராய் விஜயனை சந்தித்தபோது, நான் அரசியல் கற்கவே கேரளா வந்தேன் என கூறினார்.

அரசியல் பிரவேச அறிவிப்பு

அரசியல் பிரவேச அறிவிப்பு

இந்த நிலையில் இணையதளம் ஒன்றுக்கு கமல் அளித்த பிரத்யேக பேட்டியில் தான் அரசியலுக்கு வர திட்டமிட்டுள்ளதாகவும், தனிக்கட்சிதான் துவங்குவேன் என்றும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து 'ஒன்இந்தியா தமிழ்' இணையதளம் சார்பில் வாசகர்கள் கருத்தை அறிய ஒரு வாக்கெடுப்பை நடத்தினோம்.

கருத்து கேட்பு

கருத்து கேட்பு

'தனிக்கட்சி துவங்கப் போவதாக கமல் பேட்டி' என்ற தகவலை தலைப்பிட்டு, 3 பதில்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வாசகர்களுக்கு வழங்கியிருந்தோம். சூப்பர் முடிவு என்பது ஒரு வாய்ப்பு, ஏதாவது ஒரு கட்சியில் சேரலாம் என்பது மற்றொரு வாய்ப்பு, அரசியல் வேண்டாங்க என்பது மூன்றாவது வாய்ப்பு.

வரவேற்பே அதிகம்

வரவேற்பே அதிகம்

இதில் சூப்பர் முடிவு என்ற ஆப்ஷனுக்கு வாசகர்கள் அதிக அளவில் வாக்குகளை அளித்துள்ளனர். மொத்தம், 67.06 சதவீதம் பேர் கமல் அரசியலுக்கு வரும் முடிவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதன்மூலம் பெரும்பாலான மக்களுக்கு கமல் தனிக்கட்சி தொடங்கினால் மகிழ்ச்சி என்பதே புலனாகிறது.

கட்சியில் சேரச்சொல்கிறார்கள்

கட்சியில் சேரச்சொல்கிறார்கள்

ஏதாவது ஒரு கட்சியில் சேரலாம் என்ற ஆப்ஷனுக்கு 6.32 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். கமல், எந்த கட்சியிலும் எனக்கான கொள்கை இல்லை என்று பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், 6.32 சதவீதம் பேர் அவர் தற்போது உள்ள ஒரு கட்சியில் இணைவதையே விரும்புகிறார்கள்.

வேண்டவே, வேண்டாம்

வேண்டவே, வேண்டாம்

அரசியல் வேண்டாங்க என்று சொல்வோர், 26.62 சதவீதம் பேராகும். அவர்கள் கமல் அரசியலுக்கு வருவதையே விரும்பாதவர்களாக இருக்கலாம், அல்லது கமல், ஒரு இயக்கம் ஆரம்பித்து கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று விரும்புவோராக இருக்கலாம் என்று தெரிகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Most of the Oneindia Tamil website readers welcomes Kamalhassan decision on floating his own political party.
Please Wait while comments are loading...