நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு!
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video

திருநெல்வேலி: மர்மமான முறையில் உயிரிழந்த மகளின் மரணம் குறித்து விசாரணை நடத்தும் போலீசாரின் தரக்குறைவான பேச்சுகளால் மனமுடைந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லுாரை அடுத்துள்ள மாவடிக்காலை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மனைவி மகேஸ்வரி. 50 வயது மகேஸ்வரியின் கணவர் இறந்துவிட்ட நிலையில் 19 வயது மகள் தேவிகங்காவும் கடந்த ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார். தேவிகங்காவின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிகிறது.

எனவே போலீசார் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகேஸ்வரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். இருப்பினும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் தென்காசி நீதிமன்றத்தில் மகேஸ்வரி மனு செய்தார். கோர்ட், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இருப்பினும் இதுகுறித்து விசாரணைக்கு அழைத்த புளியங்குடி போலீஸ் அதிகாரி, மகேஸ்வரியை தரக்குறைவாக திட்டியுள்ளனர்.

எனவே இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த மகேஸ்வரி நுழைவுவாயிலில் தலை மீது மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். எனினும் அசம்பாவிதம் நடக்கும் முன்னர் போலீசார் அவரை தடுத்து மீட்டனர். பின்னர் கலெக்டர் சந்தீப் நந்துாரியிடம் அழைத்துச்சென்றனர்.
இன்று நடக்கும் திங்கள்கிழமை மனுநாளில் அவரது குறைகளை கேட்டறிந்தார். நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஏற்கனவே நடந்துள்ள தீக்குளிப்பு சம்பவத்திற்கு பிறகு இன்று நடைபெற்ற தீக்குளிப்பு சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications