அதிமுக அம்மா அணியினர் நாடகமாடுகின்றனர்.... மைத்ரேயன் குற்றச்சாட்டு
அதிமுக அம்மா அணியினர் நாடகமாடுவதாக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மைத்ரேயன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: அதிமுக அம்மா அணியினர் நாடகமாடுவதாக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மைத்ரேயன் குற்றம்சாட்டியுள்ளார். தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்றும் அவர் சாடியுள்ளார்.
சிதைந்துள்ள அதிமுகவின் இரு அணிகளுக்கும் இடையே விரைவில் பேசுவார்த்தை நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இரு அணிகளும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை நுங்கம்பாகத்தில் ஓபிஎஸ் அணியின் மைத்ரேயன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைத்து விட்டதாக கூறிய அந்த அணியினர் சசிகலா பெயரிலும் டிடிவி தினகரன் பெயரிலும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.
இதன்மூலம் எடப்பாடி அணியினர் நடத்திய நாடகம் என்பது அம்பலமாகியிருப்பதாகவும் அவர் கூறினார். மைத்ரேயனின் இந்தப் பேச்சால் இப்போதைக்கு பேச்சுவார்த்தை இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications