திருப்பூர் அருகே அதிமுக எம்.பி. சத்தியபாமா கார் மோதிய விபத்தில் திமுக இளைஞர் பலி
அதிமுக எம்பி கார் மோதிய விபத்தில் திமுக இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே எம்.பி. சத்தியபாமாவின் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற திமுகவை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
திருப்பூர் லோக்சபா தொகுதி அ.தி.மு.க எம்.பி சத்யபாமா. இவர் கோடிசெட்டிபாளையத்தில் குடியிருக்கிறார். பணி நிமித்தமாக சத்தியபாமா, வெளியூர் அல்லது வெளிமாநிலம் எங்கு விமானத்தில் செல்வதானாலும், கோவை விமான நிலையத்தைதான் வழக்கமாக பயன்படுத்துவது வழக்கம்.

இந்நிலையில், நேற்றும் வெளியூர் சென்றுவிட்டு கோவை விமான நிலையம் வந்திறங்கிய சத்யபாமாவை வீட்டுக்கு அழைத்து செல்ல அவரது கார் டிரைவர் செந்தில்குமார் ஸ்கார்பியோ காரில் கோபியிலிருந்து புறப்பட்டார்.
அப்போது, குன்னத்தூரை அடுத்துள்ள செட்டிக்குட்டை பிரிவு என்ற பகுதியில் கார் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியே சென்ற இரு சக்கர வாகனத்தின்மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த அருண்குமார் என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், அருண்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், உயிரிழந்த அருண்குமார், குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த தி.மு.க இளைஞர் அணி உறுப்பினர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications