குருமூர்த்திக்குதான் ஆண்மையில்லை... செக் பண்ணுங்க- ஜெயக்குமார் பளார்
நாங்கள் அனைவரும் ஆண்மையோடுதான் இருக்கிறோம். ஆடிட்டர் குருமூர்த்திக்குதான் அது இருக்கிறதா என்று செக் செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: ஆடிட்டர் குருமூர்த்தி தடித்த வார்த்தை ஒன்று கூறினால் நாங்கள் 100 சொல்வோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுகவின் தொண்டர்கள் முதல் முதல்வர் வரை அனைவருமே ஆண்மையோடுதான் இருக்கிறோம் என்றும் குருமூர்த்திக்குத்தான் அது இருக்கிறதா என்று செக் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தினகரனின் ஆதரவாளர்கள் 6 மாதத்திற்கு பிறகு நீக்கப்பட்டுள்ளது குறித்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி டிவிட்டரில் கருத்த தெரிவித்துள்ளார். அதில் முதல்வர் மற்றும் துணை முதல்வரை ஆண்மையற்றவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த டிவிட்டுக்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இது குறித்து இன்று தலைமை செயலகத்தில் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஆடிட்டர் குருமூர்த்தி எந்த முகத்தை வைத்துக்கொண்டு பேசுகிறார் என்று தெரியவில்லை. நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்றார்.
அதிமுகவின் சிறு தொண்டர்கள் முதல் முதல்வர் வரை அனைவரும் காங்கேயம் காளைகள் போல இருக்கிறோம். அதிமுகவை கட்டிக்காத்து வருகிறோம். ஆண்மையில்லாதவர்கள்தான் மற்றவர்களைப் பார்த்து அது இருக்கிறதா என்று கேட்பார்கள். ஆடிட்டர் குரு மூர்த்திக்கு அது இருக்கிறதா என்று முதலில் செக் செய்ய வேண்டும்.
குருமூர்த்தி தடித்த வார்த்தை ஒன்றை கூறினால் நாங்கள் 100 வார்த்தைகள் கூறுவோம். அதிமுகவினர் கொதித்து எழுந்தால் அதை தாங்க மாட்டார். அவர் பாஜகவில் என்னவாக இருக்கிறார் என்று தெரியாது. அவரதுஅறிவுரையை யாரும் கேட்கவில்லை என்றும் கூறினார்.
படிக்காதவர்கள் கூட பொறுமையாக யோசித்து பேசுவார்கள். ஆனால் குருமூர்த்தி படித்த முட்டாளாக இருக்கிறார். அவர் மீது வழக்கு தொடருவோம் என்றும் கூறியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications