நடிகர் எம்ஆர்ஆர் வாசு மகன் நீச்சல் குளத்தில் மூழ்கி மரணம்
நடிகர் எம்.ஆர்.ஆர். வாசுவின் மகன் சதீஷ் (44) நீச்சல் குளத்தில் மூழ்கி நேற்று மரணமடைந்தார்.
மேற்கு மாம்பலம் கோல்டன் காலனியில் வசித்து வந்தார் சதீஷ். மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.
எம்.ஆர்.ராதாவின் நடிப்பில் வெளியான ரத்தக் கண்ணீர் படத்தின் 2-ம் பாகத்தை படமாக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று மாலை 4 மணி அளவில் நண்பர்கள் சரவணன், பாலு ஆகியோருடன் வெளியில் சென்றார் சதீஷ்.
குன்றத்தூர், பூந்தண்டலம் கிருஷ்ணா நகரில் உள்ள பங்களாவுக்கு படப்பிடிப்புக்கான இடத்தை பார்வையிட சென்றவர், அங்கிருந்த நீச்சல் குளத்தில் இறங்கி குளித்தார். 4 மணிக்கு இறங்கிய அவர் மாலை 6 மணி வரை நீண்ட நேரமாக குளித்துக்கொண்டே இருந்தார்.
அப்போது சதீசுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கினார். அங்கிருந்தவர்கள் சதீஷைக் காப்பாற்றி நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிசிச்சைக்காக மாங்காட்டில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு சதீஷின் உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினர்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சதீஷ் நேற்று இரவு 8 மணி அளவில் உயிரிழந்தார். இதுபற்றி குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications