திமுகவில் இணைந்தார் நடிகர் எம்.ஆர்.ஆர். வாசு விக்ரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மறைந்த எம்.ஆர்.ராதாவின் பேரனும், திரைப்பட நடிகருமான எம்.ஆர்.ஆர். வாசு விக்ரம் இன்று திமுகவில் இணைந்தார்.
எம்.ஆர்.ராதாவின் மகனான வாசுவிற்கு இரு மகன்கள். இதில் சுரேஷ் பாபு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சாலை விபத்தில் பலியானார். மற்றொரு மகனான வாசு விக்ரம் சினிமா மற்றும் டெலிவிஷன் தொடர்களில் நடித்து வருகிறார்.

இவர் இன்று சென்னையில், திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு திமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
கழகத்தில் இணைந்த எம்.ஆர்.ஆர்.வாசுவுக்கு கருணாநிதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications