எங்க தல டோணிக்கு பிறந்தநாள்.. டுவிட்டரில் தெறிக்க விடும் ரசிகர்கள்
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோணிக்கு இன்று 35வது பிறந்த நாள். டோணியின் பிறந்தநாளை சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
டோணியை கேப்டன் கூல் என்று கொண்டாடும் ரசிகர்கள், நண்பனாகவும், அரசனாகவும், சிலர் கடவுளாகவும் உருவகப்படுத்தி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தோல்வி என்றால் அதற்கான பழியை தான் சுமப்பது... வெற்றி என்றால் அணியின் வீரர்களை முன்னிறுத்துவது என்பதுதான் டோணியின் பாணி. செல்லமாக கேப்டன் கூல் என்றே அழைக்கப்படுகிறார் தோனி.
அணியில் இளமையின் துடிப்பை விரும்பினாலும் அணியில் மூத்த மற்றும் அனுபவ வீரர்களை அரவணைத்துச் சென்று அவர்களது அனுபவத்திலிருந்து தான் கற்றுக் கொண்டு அணியை திறம்பட நிர்வகித்து வருகிறார்.
டோணிக்கு திரை பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக உள்ளனர். அவர்களும் தங்களின் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
|
என் ஹீரோ என் அரசன்
பாகுபலி ஹீரோ பிரபாஸை இன்று உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். பாகுபலி ஹீரோ பிரபாஸ்க்கு பிடித்த ஹீரோ டோணிதானாம். இதை அவரே கூறியுள்ளார். அரசன் மட்டுமல்ல அண்ணாவும் அவர்தான்.
|
லவ் யூ டோணி
இதுவும் பிரபாஸ் பதிவிட்டுள்ள வாழ்த்துதான். இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன். உலகின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் லவ் யூ டோணி என்று பதிவிட்டுள்ளார் பிரபாஸ்.
|
ராம் சரண் தேஜா
சிரஞ்சீவியின் மகனும் டோலிவுட் ஹீரோவுமான ராம் சரண் தேஜாவின் வாழ்த்து இது.
|
சுரேஷ் ரெய்னா
கேப்டன் கூல் உடனான இனிய தருணங்களை பகிர்ந்துள்ளார் சுரேஷ் ரெய்னா.
|
டிக்கெட் கலெக்டர் டூ கேப்டன்
கூல் கேப்டன் என்று அனைவராலும் அழைக்கப்படும் டோணி தனது 20வது வயதில் ராஞ்சி ரயில் நிலையத்தில் டிக்கெட் கலெக்டராக பணியாற்றியிருக்கிறார். டிக்கெட் கலெக்டராக இருந்த டோணி இன்று இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டனாக ரசிகர்கள் மனதில் நிறைந்துள்ளார்.
|
தலயும் தளபதியும்
டோணியை 'தல' என்றே செல்லமாக அழைக்கின்றனர் ரசிகர்கள். விஜய் உடனான சந்திப்பை இணைத்து தல, தளபதி சந்திப்பு என்று கொண்டாடியுள்ளனர் ரசிகர்கள்.
|
அஜீத் டோணி கலக்கல் மீம்ஸ்
தல என்ற வார்த்தை நடிகர் அஜீத் கேப்டன் டோணி ஆகிய இருவருக்குமே பொருந்தும். அதை வைத்து மீம்ஸ் போட்டு கலக்கியுள்ளனர். இந்த மீம்ஸ்க்கு கமெண்ட் தேவையில்லை... பார்த்தாலே புரியும்தானே!
|
எப்போதும் ஆதரவு
வெற்றியோ தோல்வியோ... அதைப்பற்றி கவலையில்லை... எப்போது எங்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு தல என்று உணர்ச்சி பூர்வமாக பதிவிட்டுள்ளனர் ரசிகர்கள்.
நான் ராஜா... எங்கேயும் நான் ராஜா
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பல அணிகளை தனது சக்தி வாய்ந்த அடிதடி பேட்டிங் மூலம் அச்சுறுத்தியவர் டோணி.
களத்தில் நினைத்துப் பார்க்க முடியாததை, பிறக் கேப்டன்கள் செய்யத் துணையாததை இவர் செய்வதில் புகழ் பெற்றவர் என்பதோடு அதில் வெற்றியும் கண்டவர். கூல் கேப்டன் எங்க தல டோணியின் பிறந்தநாளுக்காக இந்த ஸ்பெஷல் பதிவு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications