For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டோணி பிறந்தநாள்.. அமிதாப் டூ ஆல் இந்தியா ரேடியோ வரை வாழ்த்து.. சென்னையில் ரத்த தானம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: இந்திய 'ஒருநாள் கிரிக்கெட் அணி' கேப்டனான, மிஸ்டல் கூல் பிளேயர், மகேந்திர சிங் டோணி இன்று தனது 35வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். இதையொட்டி பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சென்னையில் ரத்த தான முகாம் நடக்கிறது.

டோணி பிறந்த நாளையொட்டி, டிவிட்டரில் ஹேஷ்டேக் போட்டு வாழ்த்தி வருகிறார்கள் ரசிகர்கள். பாலிவுட் பிரபலங்கள் அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் வாழ்த்து ஒருபக்கம், ஐசிசி, பிசிசிஐ மட்டுமல்லாது, ஆல் இந்தியா ரேடியோ அமைப்பினர் வாழ்த்து மறுபக்கம், ரெய்னா உள்ளிட்ட சக வீரர்கள் வருடல் இன்னொருபக்கம், என டிவிட்டரில் வாழ்த்து மழையில் நனைகிறார் கேப்டன் டோணி.

சென்னை சூப்பர் கிங்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு தகவலை ஷேர் செய்து, ரசிகர்கள் அடுத்த லெவலுக்கு டோணி பிறந்த நாளை கொண்டு சென்று விட்டதாக கூறியுள்ளது. அந்த தகவலில், சென்னையில் அரசு மருத்துவமனையில் ரத்த தானம் நடைபெற உள்ளதாக கூறி, செல்போன் எண் கொடுக்கப்பட்டுள்ளது.

English summary
India's limited-overs skipper Mahendra Singh Dhoni is celebrating his 35th birthday on Thursday (July 7). Former Team India players, current team mates along with fans greeted Captain Cool on his birthday. As a result 'HappyBirthdayCaptainCool' is trending on micro-blogging site Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X