அண்ணா அறிவாலயத்தை முகமது அலி சுற்றிப் பார்த்ததை மறக்க முடியாது.. கருணாநிதி
சென்னை: குத்துச் சண்டை ஜாம்பவான் முகமது அலி மரணமடைந்து விட்டாலும் கூட என்றென்றும் அவரது பெயர் நிச்சயம் நிலைத்திருக்கும். அவர் சென்னை வந்தது, அண்ணா அறிவாலயத்திற்கு வந்து சுற்றிப் பார்த்தது, எனது வீட்டுக்கே வந்தது ஆகியவற்றை என்னால் மறக்க முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு: முகமது அலி மறைவு குறித்தும், வாழ்க்கை வரலாறு குறித்தும் பல நாளேடுகளிலும் செய்தி வெளிவந்துள்ளது. 4-1-1990 அன்று நான் முதல்வசராக இருந்த போது சென்னை வந்த அவர் என் இல்லத்திற்கே தன்னுடைய துணைவியாருடன் வருகை தந்ததும், என்னுடன் அவர் அன்போடு உரையாடிக் கொண்டிருந்ததும், அதன் பின்னர் அவர் அண்ணா அறிவாலயத்திற்குச் சென்று சுற்றிப் பார்த்ததும் என் நினைவிலே நிலைத்திருக்கும் நிகழ்வுகளில் ஒன்று.
நிறவெறிக்கு எதிராக தனது உணர்வுகளைப் பதிவு செய்யும் வகையில், ஒரு முறை தான் வென்ற ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை ஆற்றிலே தூக்கி எறிந்த பெருமகன் தான் முகமது அலி.
அவர் மறைந்து விட்டாலும், குத்துச் சண்டை வரலாற்றில் அவர் பெயர் என்றென்றும் நிச்சயம் நிலைத்திருக்கும். வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்த அந்தப் பெருமகனின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications