வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு ஆற்றில் இறங்கி ஆய்வு செய்த முதல்வர் பழனிச்சாமி!
முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்டு இருந்த பகுதிகளை ஆற்றில் இறங்கி நேரில் பார்வையிட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
Recommended Video

திருச்சி: முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்டு இருந்த பகுதிகளை ஆற்றில் இறங்கி நேரில் பார்வையிட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
காவிரியில் வந்த வெள்ளம் காரணமாக நேற்று முதல் நாள் இரவு முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்டது. கொள்ளிடம் முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இதனால் தற்போது காவிரி நீர் அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் தற்போது கொள்ளிடம் வழியாக அதிக நீர் கடலில் கலக்கிறது.
கடந்த 180 ஆண்டுகளாக இந்த அணைதான் டெல்டா பாசனத்திற்கு உதவியது. இந்த அணை உடைந்த காரணத்தால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணையை பார்வையிட்டார்.
நேரடியாக ஆற்றில் இறங்கி முதல்வர் பழனிசாமி சேதங்களை பார்வையிட்டார். உடைந்த மதகுகளை கீழே இறங்கி நேரில் பார்த்தார் முதல்வர். எந்த பகுதியில் மிகவும் மோசமான சூழ்நிலை நிலவுகிறது என்று பார்த்தார்.

மதகுகள் அடித்துச் செல்லப்பட்ட இடம் அருகே வரை போய் நேரில் ஆய்வு செய்தார். அமைச்சர்கள் காமராஜ், கே.சி.வீரமணி, அதிகாரிகள் அவர் உடன் இருந்தனர். விரைவில் இந்த பாதிப்பு சரி செய்யப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார்.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications