தி இந்து புதிய ஆசிரியராக முகுந்த் பத்மநாபன்... பிஸினஸ்லைனுக்கு ராகவன் சீனிவாசன்!
சென்னை: நாட்டின் முன்னணி ஆங்கில நாளேடுகளில் ஒன்றான தி இந்துவின் புதிய ஆசிரியராக முகுந்த் பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே குழுமத்தின் மற்றொரு நாளேடான பிஸினஸ் லைனுக்கு ஆசிரியராக ராகவன் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமனம் மற்றும் சம்பளக் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த நியமனங்கள் ஒருமனதாக நடந்துள்ளதாக கஸ்தூரி அன்ட் சன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
தி இந்துவின் ஆசிரியராக இருந்த மாலினி பார்த்தசாரதி கடந்த ஜனவரி மாதம் பதவி விலகுவதாக அறிவித்தார். அப்போது இந்துவின் தற்காலிக தேசிய ஆசிரியராக சுரேஷ் நம்பத் பொறுப்பேற்றார். இப்போது அவருக்கு பதில் முகுந்த் பத்மநாபன் பொறுப்புக்கு வருகிறார்.
இதற்கு முன் பிஸினஸ் லைனின் ஆசிரியராக இருந்தவர் முகுந்த் பத்மநாபன் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஸினஸ் லைன் ஆசிரியராக பொறுப்பேற்று சீனிவாஸ் ராகவன், அதற்கு முன் அதே பத்திரிகையில் மூத்த இணையாசிரியராக இருந்தவர்.
இந்த ஆசிரியர் நியமனங்கள் எந்த உறுத்தலுமின்றி, இணக்கமாக நடந்து முடிய சுரேஷ் நம்பத் உறுதுணையாக இருந்ததாகவும், அவரைப் பாராட்டுவதாகவும் இந்து நிர்வாகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications