முல்லைபெரியாறில் புதிய அணை கட்டக் கூடாது.. மோடியே நேரடியாக தலையிட வேண்டும்- ஜெ. கோரிக்கை!
சென்னை: முல்லை பெரியாறு பகுதியில் புதிய அணை கட்ட கேரளாவுக்கு அனுமதி வழங்க கூடாது என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு ஆய்வு நடத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்திருந்தது. இந்நிலையில் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: முல்லை பெரியாறு பகுதியில் புதிய அணை கட்ட கேரள அரசு முயலுவது, உச்சநீதிமன்ற அரசியல்சாசன பெஞ்ச் உத்தரவுக்கு முற்றிலும் எதிரானது. 2014, மே 5ம் தேதி உச்சநீதிமன்றம் இதுதொடர்பாக பிறப்பித்த உத்தரவை மீறி, கேரளா கோர்ட் அவமதிப்பு செய்கிறது. முல்லை பெரியாறு அணை பலமானதாக உள்ளது என்று உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யுமாறு கேரளா தாக்கல் செய்த மனு அதே ஆண்டு டிசம்பர் 1ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
முல்லை பெரியாறு விவகாரம் ஒரு முடிவுக்கு வரும் நிலையில், புதிய அணை கட்ட வேண்டும் என்று மத்திய அரசிடம் கேரளா அனுமதி கேட்டுள்ளது. சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த உள்ளது. இதை கருத்தில் கொண்டு, தமிழகம் சார்பில், கேரளா நடவடிக்கையை தடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜூலை மாதம் அந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. எனவே மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம், கேரளா புதிய அணை கட்ட எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனுமதி தரக்கூடாது.
இந்த விஷயத்தில் நீங்கள் (மோடி) நேரடியாக தலையிட்டு, கேரளாவின் வேண்டுகோளை புறக்கணிக்குமாறு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications