140 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை: பொதுப்பணித் துறை அதிகாரிகள் முகாம்!
தேனி: முல்லைப் பெரியாறு அணை 140 அடியை எட்டியுள்ளதால் அணைப் பகுதியில் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் முகாமிட்டு அணையை கண்காணித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 138 அடியைத் தாண்டியது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் உயரும் போது செய்ய வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், உபரி நீரை வெளியேற்றுவதற்கு ஏற்ப அணையின் மதகுகளை சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளுக்காக துணைக் காண்காணிப்பு குழுவினர் கடந்த சில நாட்களாக அணையை ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழையினால் நீர் மட்டம் 139.80 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 1395 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 511 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
140 அடியை எட்டியதும் வல்லக்கடவு முதல் இடுக்கி அணை வரை உள்ள பகுதி மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். இதற்காக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையிலும், தேக்கடியிலும் முகாமிட்டுள்ளனர்.
வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவர்கள் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். காலைக்குள் நீர்மட்டம் 140 அடியை எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடிக்கு மேல் உயர்ந்திருப்பது இது 2-வது முறையாகும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications