10,000 பேருடன் விரைவில் தே.மு.தி.க.வில் ஐக்கியம்... 'மாஜி' முல்லைவேந்தன் அறிவிப்பு
சென்னை: 10,000 பேருடன் தே.மு.தி.க.வில் விரைவில் தாம் இணைய உள்ளதாக தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் சட்டசபை தொகுதியில் 1989, 1996, 2006 ஆகிய ஆண்டுகளில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முல்லைவேந்தன். இவர் 1996 ஆம் ஆண்டு தி.மு.க. அமைச்சரவையில் செய்தித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. அடைந்த தோல்விக்கு விளக்கம் கேட்டு, முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியது கட்சி தலைமை, அவர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்தது. அதற்கு, பழனிமாணிக்கம் உள்ளிட்டோர் விளக்கம் அளித்ததால், அவர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது.
ஆனால் முல்லைவேந்தன் முறையான விளக்கம் அளிக்கவில்லை என்று கூறி கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவர் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து அவர் விரைவில் அ.தி.மு.க.வுக்கு தாவுவார்; பாரதிய ஜனதாவுக்கு போகிறார் என்று தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில் அவர் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்து பேசினார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் முல்லைவேந்தன் கூறியதாவது:
உண்மையாக உழைப்பவர்களை தி.மு.க. தலைமைக்கு பிடிக்காது. கருணாநிதி கையில் அந்த கட்சி இல்லை. பெயர் அளவில் தான் அவர் தலைவராக உள்ளார்.
மற்றதை எல்லாம் மு.க.ஸ்டாலின் தான் கவனித்து வருகிறார். மு.க.அழகிரி எனது வீட்டிற்கு வந்தார் என்பதற்காக அவரது ஆதரவாளர் என்று என்னை கூறினார்கள். விரைவில் நான் 10,000 ஆதரவாளர்களுடன் தே.மு.தி.க.வில் இணைய உள்ளேன்.
இவ்வாறு முல்லைவேந்தன் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications