முரசொலி பவள விழா பொதுக் கூட்டம்.. கொட்டும் மழையில் பவள விழ மலர் வெளியீடு
முரசொலியின் 75வது ஆண்டு விழாவின் பொதுக் கூட்டம் கொட்டும் மழையில் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது. இதில் பவள விழா மலர் வெளியிடப்பட்டது.
சென்னை: முரசொலியின் 75வது ஆண்டு விழாவின் பொதுக் கூட்டம் கொட்டும் மழையில் அரசியல் கட்சிகள், சமூக இயக்கத் தலைவர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது. மழைத் தொடர்ந்து கொட்டியதால் கூட்டம் பாதியில் முடிக்கப்பட்டு மீண்டும் ஒரு நாள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1942ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி அன்று முரசொலி பத்திரிகை தொடங்கிய நாளாகும். கையெழுத்துப் பிரதி வடிவத்தில் மாத இதழாக வெளிவந்து கொண்டிருந்த முரசொலி 1948ல் வார இதழாகவும், 1960ல் நாளேடாகவும் அச்சில் வெளிவரத் தொடங்கியது.
திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி வெளியாகி 75 ஆண்டுகள் ஆகின்றன. முரசொலியின் பவள விழா ஆண்டு திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் முரசொலியின் பவள விழாவின் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

தலைவர்கள் பங்கேற்பு
இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, சிபிஐயின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, விசிக தலைவர் தொல். திருமாவளவன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன், இந்திய தேசிய லீக் காதர் மொய்தீன், கட்டடத் தொழிலாளர் முன்னேற்றக் கழகம் பொன். குமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

கொட்டும் மழையில் விழா
விழா தொடங்கிய உடன் திமுகவின் துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் வரவேற்புரை வழங்கினார். அவரது பேச்சின் பாதியில் மழை கொட்டத் தொடங்கியது. மேடையில் இருந்த தலைவர்கள் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் பேசத் தொடங்கினர். தொண்டர்கள் அனைவரும் நனைந்தபடியே தலைவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

மலர் வெளியீடு
மழை வேகமாக கொட்டத் தொடங்கியதால் முரசொலி பவளவிழா மலர் வெளியீட்டு நிகழ்வு உடனடியாக நடத்தப்பட்டது. பவள விழா மலரை மு.க. ஸ்டாலின் வெளியிட சிபிஐ மூத்த தலைவர் நல்லக்கண்ணு பெற்றுக் கொண்டார். பின்னர், நல்லக்கண்ணு, கி. வீரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பொதுக்கூட்டம் ஒத்தி வைப்பு
தொடர்ந்து மழை நிற்காமல் கொட்டியதால், அவசர அவசரமாக மு.க. ஸ்டாலின், பொதுக் கூட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தார். மேலும், மற்றொரு நாள் பவளவிழா பொதுக் கூட்டம் பிரமாண்டமாக நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications