நெல்லை அருகே 'ஸ்கெட்ச்' போட்டு விபத்து- 6 பேர் படுகொலை- கொலைகார டிரைவருக்கு வலைவீச்சு!!
செங்கோட்டை: செங்கோட்டை அருகே ஷேர் ஆட்டோ மீது லாரியை ஏற்றி 6 பேரை விபத்தில் பலியானது போல படுகொலை செய்த லாரி ஓட்டுநர் திருமலைக்குமாரை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழக கேரளா எல்லை பகுதியான திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் கேரளா நோக்கி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. செங்கோட்டையிலிருந்து நேற்று காலை புளியரைக்கு கற்குடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கருப்பசாமி தனது ஷேர் ஆட்டோவில் அடிவெட்டி, அவரது மகன் மகேஷ் ஆகியோரை ஏற்றிக்கொண்டு புளியரை காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமீன் கையெழுத்து போடுவதற்கு சென்றுள்ளார்.

அப்போது கட்டளைக் குடியிருப்பில் இருந்து கனகு, இசக்கியம்மாள் ஆகிய பெண்கள் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற புளியரையிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்வதற்காக அதே ஆட்டோவில் ஏறியுள்ளனர். இதே போல் மேலப்புதூர் பகுதியை சார்ந்த முருகன் என்பவரும் புளியரை செல்வதற்காக மேலபுதூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆட்டோவில் ஏறியுள்ளார்.
மொத்தம் 2 பெண்கள், 3 ஆண்களை ஏற்றிக்கொண்டு புளியரை நோக்கி ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது புதூர் என்ற பகுதியின் அருகே சென்ற போது, கேரளாவிலிருந்து செங்கோட்டையை நோக்கி வந்த லாரி ஒன்று ஆட்டோவின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் ஆட்டோவின் முன் பகுதி சுக்கு நூறாகி அப்பளம் போல் நொறுங்கியது. ஆட்டோ ஓட்டிய கருப்பசாமி வயல் வரப்பில் தூக்கி வீசப்பட்டு பலியானார்.
அப்படியிருந்தும் லாரியின் வேகம் குறையாமல் சில நூறு அடி ஆட்டோவை இழுத்துச் சென்றதில் ஆட்டோவில் பயணித்த அடிவெட்டி, முருகன், மற்றும் 2 பெண்களும் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து பலியாயினர்.
ஆட்டோவில் இருந்த மகேஷ் என்பவர் படுகாயமடைந்தார். உடனடியாக காயமடைந்த மகேஸ் மீட்கப்பட்டு நெல்லை மாவட்ட மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து புளியரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்து அதிர வைக்கும் பரப்பரப்பு தகவல்கள் வெளியாகின.
விபத்திற்குக் காரணமான லாரியை ஓட்டி வந்த திருமலைக்குமாரும், விபத்தில் பலியான ஆட்டோ டிரைவர் கருப்பசாமியும் உறவினர்கள்; ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்தது. மேலும், இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன் குளத்தில் விஷம் வைத்து மீன்கள் கொல்லப்பட்டது தொடர்பாக முன் பகை இருந்து வந்ததாகவும் புளியரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விசாரணை நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன்காரணமாக நேற்று கேரளாவில் லோடு இறக்கிவிட்டு வந்த திருமலைக்குமார் காத்திருந்து, கருப்பசாமி வந்த ஷேர் ஆட்டோ மீது லாரியை திட்டமிட்டு மோதவிட்டு விபத்து போல கொலை சம்பவத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது.
மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய திருமலைகுமார், கையில் கத்தியோடு ஓடியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக விபத்து ஏற்பட்டால் ஓட்டுனர்கள் உடனடியாக வாகனத்தை நிறுத்துவது வழக்கம். ஆனால் விபத்தை ஏற்படுத்திய லாரி சில நூறு அடி தூரம் வரை ஆட்டோவை இழுத்துச் சென்று நிறுத்தப்பட்டுள்ளதால் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட விபத்து என போலீசார் கருதுகின்றனர்.
ஆட்டோ ஓட்டுநர் மீதான முன்பகை காரணமாக 6 பேரை திருமலைக்குமார் படுகொலை செய்துள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமலைகுமார், அவனது அப்பா காளி, உறவினர் உதயக்குமார் ஆகியோர் மீது போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஷேர் ஆட்டோ வருவதை வேவு பார்த்து தகவல் கொடுத்ததாக கூறப்படும் திருமலைக்குமார் உறவினர் ஒருவரையும் காவல்துறையினர் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்துவருகின்றனர்.
தற்போது தலைமறைவாகி இருக்கும் திருமலைக்குமாரை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தென்காசி காவல்துறை ஆய்வாளர் ஆடிவேல் தலைமையில் ஒரு படையும், ஆலங்குளம் ,குற்றாலம் ஆய்வாளர்கள் தலைமையில் 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் வலைவீசி திருமலைக்குமாரை தேடி வருகின்றனர்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications