திரும்பிய பக்கமெல்லாம் கொலை.. நடுங்க வைக்கும் நெல்லை, தூத்துக்குடி
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் கொலைகள் நடந்து வருவதாக மக்கள் அச்சத்துடன் கூறுகின்றனர்.
கடந்த 2 மாதத்தில் மட்டும் அங்கு 25க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. முன்பை விட தற்போது அதிக அளவில் கூலிப்படைகள் புழக்கம் அதிகரித்து விட்டதாம். சரமாரியாக விழும் கொலைகளால் மக்கள் அச்சத்தில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இரு மாவட்டங்களிலும் சமீபத்தில் நடந்த கொலைகள் குறித்த ஒரு பார்வை...
- பழைய பேட்டையைச் சேர்ந்த அன்னாள் (55) ஜூலை 2ம் தேதி நகைக்காக கொலை செய்யப்பட்டார்.
- ஜூலை 4ம்தேதி தென்காசி மத்தளம்பாறையைச் சேர்ந்த சொர்ணம்(19) குற்றாலம் ஐந்தருவி பண்ணை இறந்து கிடந்தார்.
- பாளையங்கோட்டை லட்சுமணன் மனைவி வேலம்மாள் என்ற சித்ரா (24) கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது 3 வயது ஆண் குழந்தை ஷ்யாம் ரட்சனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்தார்.
- ஜூலை 12ம் தேதி வீரவநல்லூரை அடுத்த திருப்புடைமருதூரைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் பாலசுப்பிரமணியன்(47), அவரது தம்பி மாரியப்பன்(44) ஆகியோர் கோர்ட்டுக்கு சென்று விட்டு திரும்பிய போது கொலை செய்யப்பட்டனர்.
- ஆகஸ்ட் 1ம் தேதி திருச்செந்தூர் கரம்பவிளையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி ஜெயாவை பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாண்டி வெட்டிக் கொன்றார்.
- தூத்துக்குடி அந்தோணியார் கோயில் தெருவைச்சேர்ந்த மரிய அந்தோணி பிடலிஸ் பிரதிப் என்பவர் ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
- திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டணத்தைச் சேர்ந்த ரவி மகன் அழகுதுரை (28) என்பவரைக் காரில் கடத்தி 4 பேர் கும்பல் கொலை செய்தது.
- ஆகஸ்ட் 4ம் தேதி கோவில்பட்டி பல்லக்கு ரோட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விஏஓ சின்னசாமி என்பவரை அவரது மகன் தீபக்சாம்ராஜ் கொலை செய்தார்.
- 7ம் தேதி ஏரல் அருகே உள்ள மங்கலகுறிச்சியில் தூத்துக்குடியைச் சேர்ந்த திருமணிராஜா அவரது நண்பர் பத்திரகாளிமுத்துவால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
- சேரன் மகாதேவியில் கடந்த 8ம் தேதி அரசு ஊழியர் செல்லையா கொலை செய்யப்பட்டார்.
- 10ம் தேதி தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுசிங்போர்டு காலனியைச் சேர்ந்த பிரபல ரவுடி சரவணனை முன்விரோதத்தில் ஆனந்தகுமார் தரப்பு போட்டுத் தள்ளியது.
- பரப்பாடி அருகே உள்ள கல்மாணிக்கபுரத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரை அவரது மனைவி ராமகனி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொன்றார்.
- 16ம் தேதி களக்காடு சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த அருணாசலம் என்பவரை பைக்கில் அழைத்துச்சென்று கொலை செய்தனர்.
- 2 நாட்களுக்கு முன்பு நெல்லை மேலப்பாளையம் அருகே ராஜசேகர் என்பவர் போதை மற்றும் கஞ்சா பழக்கத்தால் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.
தேவர்குளம் அருகே உள்ள மூவிருந்தாளியை சேர்ந்த விவசாயி சண்முகையா அதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராமரால் அடித்துக் கொல்லப்பட்டார்.
கள்ளக்காதல் கொலைகளோடு முன்விரோதம் தொடர்பாகவும்,திடீர் மோதல் தொடர்பாகவும் நடக்கும் கொலைகளும் அதிகரித்து வருவது மக்களை அதிர வைப்பதாக உள்ளது.
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications