சிறுமியின் கண் சிகிச்சைக்கு உதவிய இஸ்லாமிய இளைஞர்கள்
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: பரமக்குடியில் கண் குறைபாடு உள்ள இந்து மத சிறுமிக்கு இஸ்லாமிய இளைஞர்கள் நிதியுதவி செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு கண் குறைபாடு உள்ளது பற்றி கீழப்பள்ளிவாசல் இளைஞர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் சிறுமியின் சிகிச்சைக்கு நிதி திரட்டினர்.

திரட்டப்பட்ட நிதியை சிறுமியிடம் அளிக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கீழப்பள்ளிவாசல் தலைவர் ஹாஜி எஸ்.என்.எம். முகம்மது யாக்கூப், எமனேஸ்வரம் காவல் நிலைய துணை ஆய்வாளர், ஆசிரியர் எம். புரோஸ்கான், ஆசிரியர் கே.ஏ. ஹிதாயத்துல்லா, அஸ்லம், ஜியாவுல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காவல்துறை துணை ஆய்வாளர் நிதியுதவியை வழங்கினார்.












Click it and Unblock the Notifications