அதிகாரத்தை தமிழக பொறுப்பு ஆளுநர் துஷ்பிரயோகம் செய்கிறார்: முத்தரசன் குற்றச்சாட்டு
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து வைத்துக் கொண்டு முதல்வராக துடித்துக் கொண்டிருக்கிறார் சசிகலா. அதே நேரத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது. இதுவரை அவருக்கு 6 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 5 எம்.பி.க்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பள்ளி கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. மேலும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, நகராட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் ஓ.பி.எஸ். அணிக்கு தாவ உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளனர்.
இதனால் தம்மால் முதல்வராக முடியாதோ என பதற்றத்திலும் விரக்தியிலும் இருக்கிறார் சசிகலா. அத்துடன் நேற்று ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார் சசிகலா. ஆனால் ஆளுநர் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை. இதனால் மேலும் அதிர்ச்சியடைந்துள்ளது மன்னார்குடி கோஷ்டி.
இந்நிலையில் அதிமுகவில் நடக்கும் அதிகார போட்டி பகிரங்கமாக தெரிந்துவிட்டது என்று இந்திய கம்யூனிஸ் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். மேலும், சசிகலாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல் காலம் தாழ்த்துவதன் மூலம் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார் என்றும். ஆளுநரை காலதாமதம் செய்யக்கோரி பின்னால் இருந்து ஏதோ ஒரு சக்தி நிர்பந்திக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications