விவசாயிகளை சந்திக்க மறுத்து நிர்வாணமாக ஓட விடுவதா?- மோடிக்கு முத்தரசன், ஜி.கே. வாசன் கண்டனம்
விவசாயிகளை சந்திக்க மறுத்து அவர்களை நிர்வாணமாக ஓடவிட்ட பிரதமர் மோடிக்கு தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை: தமிழக விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்க மறுத்ததால் அவர்கள் நிர்வாணமாக ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் கூறியுள்ளார். தமிழக விவசாயிகள் நிர்வாணமாக போரடியது வேதனைக்குரியது என்று தமிழ் மாநில கட்சித்தலைவர் ஜி.கே. வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த 28 நாட்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள் 7 விவசாயிகள் இன்று நாடாளுமன்றம் முன்பாக ராஜபாதையில் ஆடைகளை அவிழ்த்து விட்டு தரையில் உருண்டனர். இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பயிர் கடன் தள்ளுபடி, உரிய வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நிர்வாண போராட்டம்
இந்நிலையில் இதன் உச்சகட்டமாக இதுவரை அரை நிர்வாணத்துடன் போராடி வந்த விவசாயிகள், இன்று நிர்வாணமாக போராட்டம் நடத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. வீரமரணம் அடையத் தயார் என்றும் விவசாயிகள் கூறி வருகின்றனர்.

முத்தரசன் கண்டனம்
இது குறித்து தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். விவசாயிகளை சந்திக்காமல் அவர்களை சுடும் வெயிலில் நிர்வாணமாக ஓட விட்டது ஏன் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

போராட்டம் வலுப்பெறும்
பிரதமர் விவசாயிகளை சந்தித்து பேசி இருக்கலாம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுவரை விவசாயிகளை சந்திக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். மத்திய, மாநில அரசுகள் அலட்சியத்தால் விவசாயிகள் போராட்டம் மேலும் வலுப்பெறும் என்றும் முத்தரசன் தெரிவித்தார்.

ஜி.கே. வாசன்
நாட்டின் தலைநகரில் தமிழக விவசாயிகள் நிர்வாணமாக போராடியது தலைகுனிவு என்றும் வேதனையாக இருக்கிறது என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications