வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: முத்தரசன்
மதுரை: தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நல கூட்டணி சார்பில் மதுரையில் வருகிற 26 ஆம் தேதி மாநாடு நடக்கிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதனை பார்வையிட இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் இன்று மதுரை வந்தார். மாநாட்டு பந்தல் அமைப்பு பணியை அவர் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.

பின்னர் மாநாட்டு திடலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், அ.தி.மு.க. அரசின் கொள்கைகள் திட்டங்கள் தான் கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மக்கள் பயன் பெறும் வகையில் அதில் ஒன்றும் இல்லை. மேலும் சட்டசபையில் பேசிய அமைச்சர் நத்தம் விசுவநாதன், தமிழகத்தில் மதுவிலக்கு கிடையாது என்று அறிவித்துள்ளார். இது மக்களின் எதிர்பார்ப்புக்கு எதிரான கருத்து.
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலும் மதுவிலக்கை கொண்டு வரமாட்டோம் என்ற வகையில் அவர்களது பேச்சு உள்ளது. எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். மது இல்லாத தமிழகம் உருவாக மக்கள் நல கூட்டணி புதிய மாற்று சக்தியாக உருவெடுத்துள்ளது. இதனை மக்கள் வரவேற்று உள்ளனர். மதுரை மாநாடு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications