முடிந்தது தா.பாண்டியன் அத்தியாயம்... இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளரானார் இரா.முத்தரசன்
கோவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இரா. முத்தரசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இத்துடன் தா.பாண்டியனின் அத்தியாயம் முடிவுக்கு வந்தது.
தமிழ் மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தா.பாண்டியன் இருந்து வந்தார். இந்த நிலையில், கட்சியின் 23வது மாநில மாநாடு கோவையில் நடந்தது. மாநிலச் செயலாளர் பதவிக்கு இரா.முத்தரசன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து சி.மகேந்திரன் போட்டியிட்டார்.

இதில், தா.பாண்டியன் இரா.முத்தரசனை மாநில செயலாளராக முன்மொழிய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் வழிமொழிந்தார். இதையடுத்து இரா.முத்தரசன் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஒன்றிய உறுப்பினர், மாநில செயற்குழு உறுப்பினர், ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் முத்தரசன் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லகண்ணு, தா.பாண்டியன் என கடந்த பல வருடங்களாக தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்து வந்த நிலையில் தற்போது தஞ்சைத் தரணியிலிருந்து முத்தரசன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications