என் காதல் உண்மையானது... அதை திரும்ப பெறுவேன் - பரபரக்கும் ஓவியாவின் சபத வீடியோ!
உண்மையான காதல் தோற்காது. என் காதல் தோற்காது அதை நான் திரும்ப பெறுவேன் என்று நடிகை ஓவியா கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: நான் மன அழுத்தத்தோடு இல்லை... ரிலாக்ஸ் ஆக இருக்கிறேன் என்று நடிகை ஓவியா கூறியுள்ளார். உண்மைக்காதல் என்றுமே தோற்காது என்று கூறியுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் தங்கியிருந்த ஓவியாவிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டில் இருந்து தானாகவே வெளியேறினார் ஓவியா.
இத்தனை நாட்கள் கழித்து தற்போது யுடுயூப் வீடியோ மூலம் தனது ரசிகர்களிடம் பேசியுள்ளார் ஓவியா. இதில் பிக்பாஸ் பற்றி மட்டுமல்ல தன்னுடைய ஹேர்கட் பற்றியும் பேசியுள்ளார்.
இனிமேல் நான் பிக்பாஸ் வீட்டிற்கு போக மாட்டேன். நான் சினிமாவில் நடிக்கப் போகிறேன். என் பேரை சொல்லி பார்க்க வேண்டாம். பிடிக்காவிட்டால் கேவலமாக காறி துப்பிடுங்க என்று கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவிட்ட சில மணிநேரங்களிலேயே பல லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

உண்மை காதல்
ஆரவ் கூட காதல் இருக்கா? மன அழுத்தம் இருக்கா என்று பலரும் கேட்கின்றனர். நான் மன அழுத்தத்தோடு இல்லை. ரிலாக்ஸ் ஆக இருந்தேன். ஜாலியாக இருந்தேன். நான் ஆரவ் உடன் காதலில் இருந்தேனா என்று கேட்கின்றனர். உண்மையான காதல் தோற்காது. என்னை பைத்தியம் என்று கூட நினைக்கலாம். ஒருவரை உண்மையாக காதலித்து விட்டு அவரை வெறுக்கவேண்டும் என்று சொன்னால் என்னால் முடியாது.

காதலிப்பேன்
நான் காதலித்து கொண்டேதான் இருப்பேன். என் காதல் உண்மையானது. அதை திரும்ப பெறுவேன். நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். நிறைய பேர் என்னிடம் அன்பாக இருக்கின்றனர். அனைவருக்கும் ஐ லவ் யூ

சாபம் தேவையில்லை
சக்தி, ஜூலியை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள். மனிதர்கள் தவறு செய்வது இயல்பு. நானும் தவறு செய்தவள்தான். மிகப்பெரிய தவறு செய்தவர்களைக் கூட அரசு மன்னித்து விடுகிறது. அப்படியிருக்கும் நாம் ஏன் மற்றவர்களை தொந்தரவு செய்ய வேண்டும். மற்றவர்களை தொந்தரவு செய்யும் ரசிகர்கள் எனக்கு தேவையில்லை. இதனால் யாருடைய சாபத்தையும் நான் சம்பாதிக்க விரும்பவில்லை.

புதிய ஹேர் ஸ்டைல்
என்னோட ஹேர் கட் பற்றி கேட்கின்றனர். சிகிச்சை எல்லாம் எதுவும் கிடையாது. அதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் தயாரிக்கும் நிறுவனம் என்னை அணுகினார்கள். பெண்கள் முடியில்லாமல் நிறைய மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கின்றனர் என்பதை நான் உணர்ந்துள்ளேன்.

ரொம்ப ஃப்ரியா ஃபீல் பண்றேன்
நானும் முடியை வெட்டிக்கொள்ளலாம் என்பதால் வெட்டினேன். இதனால் நான் நிறைய ஃபிரியா உணர்கிறேன். பல பெண்கள் இதை முயற்சி செய்யலாம். இந்த ஹேர் ஸ்டைல் ரொம்ப நல்லாயிருக்கு.

நான் ரோல் மாடலா
என்னை யாரும் ரோல் மாடலாக எடுக்க வேண்டாம். எனக்கும் நிறைய பாசிட்டிவ், நெகடிவ் பக்கமும் இருக்கிறது. எனவே யாரையும் நம்பி பின் தொடர வேண்டாம். மற்றவர்களைப் பார்த்து காப்பியடிக்க வேண்டாம்.

அன்பை வெளிப்படுத்துகிறேன்
இப்போதுதான் நான் யுடுயூப் எல்லாம் பார்த்து இந்த வீடியோவை வெளியிட்டுள்ளேன். எல்லோருடனும் பேச வேண்டும், கட்டியணைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வீடியோ மூலம் என் அன்பை வெளிப்படுத்துகிறேன்.
கேள்விகள் கேட்கலாம்
நான் தத்துவம் சொல்ல விரும்பவில்லை. என்னிடம் கேள்விகளை கேட்க விரும்புவர்கள் டுவிட்டர், சமூக வலைத்தளங்கள் மூலமாக கேட்கலாம் என்று கூறியுள்ளார் ஓவியா.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications