நினைத்த உடன் ருசிக்க நினைக்கும் மைசூர் பாகு இப்போது ஆன்லைனில்.. நாங்க புதுசுங்கண்ணா...

Subscribe to Oneindia Tamil

இனிப்பு பண்டங்கள் என்றாலே அனைவருக்கும் நாவிலே எச்சில் ஊற ஆரம்பித்துவிடும். அதிலும் மைசூர் பாகு என்றால் அடடே. இந்த மைசூர் பாகு கர்நாடகாவில் உள்ள மைசூரை மன்னர்கள் ஆண்ட காலத்தில் அரசரின் சமையல் காரர் செய்த ஒரு இனிப்பு பண்டம். பின்னாளில் இது நாடு முழுவதும் பரவி இன்று உலகம் முழுவதும் தயாரித்து ருசிக்கிறார்கள். இன்று எத்தனையோ இனிப்பு வகைகள் வந்தாலும் இதன் சுவைக்கு ஈடாகுமா? என்ன..

மைசூர் பாகு என்ற பெயர் வரக்காரணம் என்ன?

இது மைசூரில் தான் முதன் முதலில் உதயம் ஆனது. அதனால் இந்த ருசியான இனிப்பு பண்டத்தை மைசூர் என்ற பெயரை சேர்த்தே அழைக்கிறோம். ருசியான மைசூர் பாகு சர்க்கரை பயன்படுத்தி செய்யப்படும் பாகு மூலம் தயாரிக்கப்பட்டதாலும் ஊர் பேரையும் இந்த பாகுவையும் சேர்த்து மைசூர் பாகு என்று பெயர் பெற்றது. இந்த மைசூர் பாகு உச்சரிப்பில் சிறிது மாற்றம் பெற்று இன்று மைசூர் பாக்கு என்றே அழைக்கிறார்கள்.

Mysore pak is the tamil traditional snack

ருசியான மைசூர் பாகு செய்வது எப்படி?

மைசூர் பாகு செய்வது என்பது அவ்வளவு எளிதானது அல்ல மற்ற இனிப்பு பண்டங்களை போல் நினைத்த உடன் செய்து விட முடியாது. இதை முயற்சித்தவர்களுக்கு தான் தெரியும். என்னெனில் பாகு சரியான பதம் எடுத்தால் மட்டுமே அதன் ருசியை முழுவதுமாக பெற முடியும். கொஞ்சம் பாகு பதம் வருவதற்குள் எடுத்துவிட்டால் மைசூர் பாகு அல்வா போல் இருக்கும். கொஞ்சம் பாகு பதம் கூடி எடுத்து விட்டால் கல் போல் மாறி விடும் உடைக்க கூட முடியாது. இதனால் தான் பலரும் இதை முயற்சிக்க கூட பயப்புடுகிறார்கள் என்றே நினைக்கின்றேன்.

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 கப்

நெய் - 1 1 /4 கப்

எண்ணெய் - 3 /4 கப்

சர்க்கரை - 2 கப்

பால் - 1/4 கப்

தண்ணீர் - 1 /4 கப்

சமையல் சோடா - 1சிட்டிகை

செய்முறை

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு சூடு செய்து கொள்ள வேண்டும். பிறகு முதலில் கடாயை சூடு படுத்தி, அதில் கடலை மாவை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை தீயவிடாமல் சிவக்க வறுக்கவேண்டும். பச்சை வாசனை சென்ற உடன் அடுப்பை நிறுத்தி விட்டு அதில் நெய் மற்றும் எண்ணையை சேர்த்து கலந்து இறக்கி வைக்கவும்.

Mysore pak is the tamil traditional snack

மீண்டும் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் மற்றும் பால் ஆகியவற்றை கலந்து நன்றாக சூடு செய்யவும். சர்க்கரை நன்கு கரைந்ததும் பாகு பதத்திற்கு வரும் வரை நன்றாக காய்ச்சி கலக்கவும். பாகு பதம் வந்ததும் இதோடு நாம் தயாரித்து வைத்த மாவை சேர்த்து கலக்க வேண்டும். நன்றாக மாவு கலந்ததும் இப்பொழுது சூடாக வைத்துள்ள எண்ணெய் நெய் கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கலக்க வேண்டும். இப்பொழுது கலவை கெட்டியானதும் ஒரு தட்டில் நெய் தடவி அதில் ஊற்றி தேவையான அளவுகளில் துண்டுகளாக செய்து ருசிக்கவும்.

இவ்வளவு ருசியான மைசூர் பாகை இதே தரத்திலும் ருசியிலும் தயாரித்து உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து சேர்க்கிறார்கள் நேடிவ்கிரஷ்.காம் (www.nativcrush.com) என்ற இணையதளம். எனக்கு மைசூர் பாகு சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது உங்களுக்கு இன்னும் வரவில்லையா? ஆர்டர் செய்யுங்கள் வீட்டிலே குடும்பத்தோடு அமர்ந்து இனிப்பை சுவையுங்கள்.

Mysore pak is the tamil traditional snack

தமிழகத்தில் பலதரப்பட்ட ஊர்களில் சிறப்பு வாய்ந்த நொறுக்கு தீனிகளை ஒரே நேரத்தில் வாங்க முடியாமலும் அதன் பயனை அடைய முடியாமலும் நம் மக்கள் அவசர கதியில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஓட்டத்தில் துரித உணவை உண்டு உடல் நலத்தை கெடுத்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் உடல் நலத்தை காக்கவும் நேரத்தை மிச்சபடுதவும் உங்கள் தேவையை எங்கள் சேவையாக கொண்டு வெவ்வேறு ஊர்களின் சிறப்பு பெற்ற நொறுக்கு தீனிகள் இல்லம் தேடி வருகிறது நாவில் சுவை தருகிறது. உங்கள் நேடிவ்க்ருஷ்.காம் (www.nativcrush.com).

ஒவ்வொரு ஊரில் ஒரு தின்பண்டம் சிறப்பு அவற்றை ஒரே இணையதளத்தில் மிக குறைவான விலையில் விற்கிறது நமது நேடிவ்க்ருஷ்.காம். உங்களுக்கு பிடித்த மற்றும் ஆசை பட்டு உண்ண நினைத்த பல பிரபலமான தின்பண்டங்களை மிக எளிதாக ஆன்லைனில் ஆர்டர் செய்து உங்கள் வீட்டிற்கே வந்து சேரும் தின்பண்டங்களை ருசித்து மகிழுங்கள் ..

நாம் நமது சொந்த ஊர்களை விட்டு இந்தியாவின் பல இடங்களில் வேலைக்காக மற்றும் படிக்கச் சென்றுள்ளோம். அங்கு என்னதான் பல விதமான ஸ்நாக்ஸ் சாப்பிட்டு இருந்தாலும், நமது சொந்த ஊர் ஸ்நாக்ஸ்களுக்கு ஈடாகாது என்பதை உணர்ந்து, ஒவ்வொரு ஊரின் தனித்துவமான மற்றும் அனைத்து வகையான ஸ்நாக்ஸ்களையும் எல்லோரிடமும் கொண்டு சேர்க்க உருவாக்கப்பட்டது தான் Nativcrush.com.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+