தூத்துக்குடி என். பெரியசாமி மரணம்.. மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி மரியாதை
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என். பெரியசாமி காலமானார். அவரது உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: திமுக மாவட்ட செயலாளர் என். பெரியசாமி காலமானார். தனியார் மருத்துவமனையில் உள்ள அவரது உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
தட்டார்மடத்தைச் சேர்ந்த பெரியசாமி திமுகவில் தொடர்ந்து 40 ஆண்டு காலம் செயல்பாட்டில் இருந்தவர். திமுகவின் அசைக்க முடியாத சக்தியாக இருந்த அவருக்கு நுரையீரல் தொடர்பான உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. இதனை அடுத்து திமுக 3 நாள் துக்கம் அறிவித்துள்ளது. திமுகவின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. திமுக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து ராமச்சந்திரா மருத்துவமனையில் உள்ள என். பெரியசாமியின் உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவரது மனைவி துர்கா, சகோதரி செல்வி ஆகியோரும் பெரியசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். திமுக மூத்த தலைவர் டி ஆர் பாலு நேரில் சென்று பெரியசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
1989 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலிகளில் வெற்றி பெற்று
இரண்டு முறை எம்எல்ஏவாக பதவி வகித்தவர். 30 ஆண்டு காலம் தொடர்ந்து மாவட்ட செயலாளராக இருந்து திமுகவின் வலிமைக்கு பாடுபாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"மும்மொழி கொள்கை வைத்து பிரச்சாரம் செய்யும் தைரியம் இருக்கா.?" பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் சவால் -
தாம்பரம் ட்விஸ்ட்.. ஸ்டாலின் போட்ட ‘மாஸ்டர் பிளான்’.. எதிர்ப்பை ஆதரவாக்கிய திமுகவின் தேர்தல் வித்தை! -
“நான் பேசியதாக பரப்பப்பட்ட ஆடியோ AI மூலம் பொய்யாக உருவாக்கப்பட்டது” - ஆ.ராசா விளக்கம்! -
6ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை! இந்தி திணிப்பை கண்டித்து சிபிஎஸ்இக்கு ஸ்டாலின் கண்டனம் -
கடைசிக் காலத்தில் கலைஞர் சிறைப்படுத்தப்பட்டிருந்தாரா? உண்மைக்கு மாறானது.. வைரமுத்து -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
வேட்பு மனு தாக்கலின்போதே திமுக தவெக கட்சியினர் மோதல்.. ராமநாதபுரத்தில் பரபரப்பு! -
மதுரை தெற்கு தொகுதி.. புதூர் பூமிநாதன் vs ராம ஸ்ரீனிவாசன்.. பலம் என்ன? பலவீனம் என்ன?












Click it and Unblock the Notifications