புதுச்சேரி முதல்வர் இனிமேல் 'பாகுபலி' ரங்கசாமி என அன்போடு அழைக்கப்படுவார்!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, பிறந்த நாளையொட்டி, என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் வைத்துள்ள வாழ்த்து போஸ்டர்களை பார்க்கும்போது, அவர்கள் வாழ்த்துகிறார்களா, அல்லது கலாய்க்கிறார்களா என்ற சந்தேகமே வந்துள்ளது.

இப்போ, டாக் ஆப் தி டவுன் என்றால், அது, பாகுபலி திரைப்படம்தான். ஹீரோ பிரபாஸ், மிகப்பெரிய லிங்கத்தை தோளில் தூக்கி வரும் போஸ்டர்கள் ஏக பிரபலம். விடுவார்களா நம்மூர் அரசியல்வாதிகள், அதையே காப்பியடித்து, தங்களுக்கும் போஸ்டர் வைத்துக்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

N.R.Congress party cadres crate creative posters for Rangasamy

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகஸ்ட் 4ம் தேதி பிறந்த நாள் கொண்டாடுகிறார். இதையொட்டி, என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதிலும், வகை வகையான போஸ்டர்கள் போட்டு கலக்கி வருகின்றனர். அப்படி ஒரு தொண்டரின் உள்ளத்தில் தோன்றியதுதான், ரங்கசாமியை, பிரபாசாக சித்தரிக்கும் எண்ணம்.

அந்த போஸ்டரில் பிரபாஸ் உடலில், ரங்கசாமியின் தலையை கிராபிக்சில் ஒட்ட வைத்து, லிங்கத்தோடு ஸ்டைலாக நடந்து வருவதுபோல ஒட்டியுள்ளனர்.

N.R.Congress party cadres crate creative posters for Rangasamy

மற்றொரு போஸ்டர், எவர்கிரீன், புரூஸ்லியுடையது. அவரது உடலை பயன்படுத்தி, தலை பகுதியில் ரங்கசாமியை ஒட்ட வைத்து, எதிரிகளை பந்தாடுவது போல சித்தரித்துள்ளது அந்த போஸ்டர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+