வைகோவை தாக்க முயன்ற நாம் தமிழர் கட்சியினர்.. மீட்டு சென்ற மதிமுக தொண்டர்கள்!
சீமான் குறித்து பேசியதற்காக வைகோ மீது நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல் நடத்த முயன்று இருக்கிறார்கள்.
Recommended Video

மதுரை: சீமான் குறித்து பேசியதற்காக வைகோ மீது நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல் நடத்த முயன்று இருக்கிறார்கள்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கைரேகை சட்டத்தை எதிர்த்து, போராடி உயிர்நீத்த 16 பேரின் நினைவிடம் உள்ளது. 16 பேரின் நினைவு தினத்தை முன்னிட்டு, அங்கு வைகோ மரியாதை செலுத்தச் சென்றார்.

அப்போது அங்கு நாம் தமிழர் கட்சியினரும் அதிக அளவில் கூடி இருந்தனர். நிகழ்ச்சியில் பேசிய வைகோ, தான் தமிழன் அல்ல என்றும் தெலுங்கன் என்றும் அப்பாவி இளைஞர்களை சிலர் உசுப்பேற்றி விடுவதாக சீமான் பெயரை குறிப்பிடாமல் பேசினார்.
இதனை நம்பி தன்னை தெலுங்கன் என்று சமூக வலைதளங்களில் ஒரு கட்சியினர் அவதூறு பரப்பி வருவதாகவும் வைகோ பேசினார். தொடர்ந்து அந்த கட்சியினர் தனது ஜாதியை கூறி, தன்னை விமர்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த எச்சரிக்கையை வெளியே கூடியிருக்கும் கட்சியினருக்கு தான் விடுப்பதாகவும் வைகோ வெளிப்படையாக கூறினார். வைகோவின் பேச்சை கேட்ட நாம் தமிழர் கட்சியினர் அவருக்கு எதிராக முழக்கம் எழுப்பி உள்ளே நுழைய முயன்றனர்.
உடனடியாக போலீசார் வைகோவை அங்கிருந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டதால் அவர் புறப்பட்டார். வைகோ வெளியே செல்லும் போது திரண்ட நாம் தமிழர் கட்சியினர் வைகோ அருகே நெருங்கி அவரை தாக்க முயற்சி செய்தார்கள்.
அவர்களுடன் வைகோ வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, அங்கிருந்த மதிமுக தொண்டர்கள் வைகோவை பத்திரமாக அழைத்துச் சென்றனர். இதையடுத்து, மதிமுக தொண்டர்களையும், நாம் தமிழர் கட்சியினரையும் போலீசார் அங்கிருந்து வெளியேற்றினர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications