திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி இருக்கும்: கடலூரில் சீமான் பேச்சு
கடலூர்: திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி இருக்கும் என்று அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரி்ல் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் கடலூர் மஞ்ச குப்பம் மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. இதில் சட்டமன்றத் தேர்தலில் அக் கட்சியின் சார்பாக போட்டியிடும் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழர்கள் பிரிந்து நிற்பதால் நன்மை இல்லை. தமிழர்கள் ஜாதி ரீதியாக பிரிந்து நிற்கிறார்கள். தமிழர்கள் தமிழர்களாக இணைய வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை எதிர்க்காதது ஏன். திமுகவுக்கு மாற்று அதிமுக. அதிமுகவுக்கு மாற்று திமுக. திமுக அமைச்சர்களை மாற்றாமல் கெடுப்பார். ஜெயலலிதா அமைச்சர்களை மாற்றி கெடுப்பார்.
திமுக ஆட்சியில் பாராட்டு விழாக்கள் அதிகமாக இருக்கும். அதிமுக ஆட்சியில் பதவி ஏற்பு விழா அதிகமாக இருக்கும். தமிழகத்தில் இருந்து திராவிட கட்சிகளை வெளியேற்ற இதுதான் சரியான தருணம். மற்றவர்களுக்கு தான் இது தேர்தல். நமக்கு இந்த தேர்தல் போர். கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தது திமுக ஆட்சியில் தான். திமுகவும், அதிமுகவும் ஒரு தடைவையாவது இலங்கை தமிழர்களுக்காக உயிர்நீத்த முத்துக்குமார், செங்கொடிக்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறார்களா என்றார்.
எல்லா தொழிலும் உள்ள இந்த நாட்டில் ஏன் பிச்சையெடுக்கும் நிலை. ஆண்களுக்கு பெண்கள் சமமான நிலை உருவாக்கப்படும். எங்கள் திருநாட்டில் எங்கள் நல் ஆட்சியே என்று நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தலில் நிற்கிறார்கள். மாற்றம் கொடுப்போம். செயலில் காட்டுவோம்.
நாம் தமிழர் கட்சியில் 42 பேர் பெண்கள். ஒருவர் திருநங்கை. நாடாளுமன்றத் தேர்தலில் 20 ஆண்கள், 20 பெண்கள் வேட்பாளராக நிறுத்துவோம். புதுச்சேரியிலும், காரைக்காலிலும் தனித்தே போட்டியிடுவோம். பிப்ரவரிக்குள் வேட்பாளர்களை அறிவிப்போம். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி இருக்கும் என சீமான் பேசினார்.
எங்கள் திருநாட்டில் எங்கள் நல் ஆட்சியே, தலைநகரை மாற்றுவோம், தமிழகத்தையே மாற்றுவோம் என்கிற முழக்கங்களுடன் தேர்தலை சந்திக்க நாம் தமிழர் கட்சி தயாராகி விட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications