'இந்தி ஒழிக' கோட்பாடு அல்ல-எங்க ஆட்சியில் அண்ணா, கருணாநிதி சமாதிகள் என்னாகும் தெரியுமா? சீமான் பகீர்
உடுமலைப்பேட்டை: "இந்தி ஒழிக" என்பது எங்களது கோட்பாடு அல்ல.. நாங்கள் இந்தி உட்பட எந்த ஒரு மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது விவாதப் பொருளாகி இருக்கிறது.
1938-ம் ஆண்டு தொடங்கி தமிழ்நாட்டில் இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டங்களில் உயிர் நீத்த எண்ணற்ற தமிழர்களை நினைவு கூரும் வகையில் ஆண்டு தோறும் ஜனவரி 25-ந் தேதி மொழிப்போர் தியாகிகள் நாள் கடைபிடிக்கப்படுகிறது.

சமாதிகள் என்னாகும் தெரியுமா?: உடுமலைப்பேட்டையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மொழிப்போர் தியாகிகள் நாள் வணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: நாம் தமிழர் ஆட்சியில் சென்னை மெரினா கடற்கரையில் மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவிடம் கட்டுவோம். எப்படி வைக்கிறேன் பாரு.. ஆனால் நீ வைக்கும் சமாதி எந்த இடத்துக்கு போகும் என எவனுக்கும் தெரியாது. இது என் நிலம். இது என் நாடு. என் இன அடையாளம்தான் மேலோங்கி நிற்கும். எங்கு திரும்பினாலும் தமிழ், தமிழர் அடையாளம்தான் இருக்கும்.

இந்தி ஒழிக அல்ல: இந்திக்கு எதிரான மொழிப் புரட்சி அல்ல.. இந்தி திணிப்புக்கு எதிரான மொழிப் புரட்சி இங்கு நடந்தது. நாம் உலகின் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல இந்தி உட்பட. நம்முடைய கோட்பாடு இந்தி ஒழிக என்பது அல்ல. தமிழ் வாழ்க என்பதுதான். நான் ஏன் அவர்களது அம்மா ஒழிய வேண்டும் என சொல்ல வேண்டும்? அவன் மொழி அழிய வேண்டும் என நான் ஏன்டா சொல்லனும்? என் மொழி வாழனும்.. என் மொழியை காக்கனும் அதான் என் கோட்பாடு. என் மொழியை சாகாமல் காக்க வேண்டும். அதுதான் கோட்பாடு.

சமஸ்கிருதம்: இந்தியாவில் மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. ஆனால் சமஸ்கிருதத்துக்கு என ஏதாவது ஒரு மாநிலம் பிரிக்கப்பட்டதா? கோவிலில் சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் ஓதுகிறவர்கள் கூட அவர்களுக்குள் சமஸ்கிருதத்தில் பேசிக் கொள்வதில்லை. இந்திய அரசு தெரிவித்த புள்ளி விவரப்படியே 22,000 பேர்தான் சமஸ்கிருதம் பேசுகின்றனர். ஆனால் மடாலயங்கள், ஆசிரமங்களில் சமஸ்கிருதம் கட்டாயமாக கற்பிக்கப்படுகிறது. இவ்வாறு சீமான் பேசினார்.

-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications