நிவாரணம்.. 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சீமான் தலைமையில் கேரளா செல்லும் நாம் தமிழர் கட்சியினர்
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் வெள்ள நிவாரணப் பொருட்களோடு, நாம் தமிழர் கட்சியினர் கேரளா புறப்பட்டனர்.

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்குப் பருவமழை ஏற்படுத்திய மிக அதிகப்படியான மழைப்பொழிவால் பெரும்வெள்ளத்தை எதிர்கொண்டு பெரும்பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மலையாளச் சகோதரர்களுக்கு மானுடத்தோடு மலையாள மக்களின் துயரில் பங்கேற்று அவர்கள் மீண்டெழ நம்மால் முடிந்த உதவிகளைச் செய்கிறோம்.
மானுடத்தோடு மலையாள மக்களின் துயரில் பங்கேற்று அவர்கள் மீண்டெழ நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யும் நோக்கில் #சீமான் தலைமையில் 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் வெள்ள நிவாரணப் பொருட்களைச் சேகரித்து கொண்டு இன்று 25-08-2018 மாலை 05 மணியளவில் கோட்டயம், #சங்கனாசேரி முகாமிற்கு விரைகின்றனர். pic.twitter.com/jnrOoLU1Uo
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) August 25, 2018
இந்தநோக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் வெள்ள நிவாரணப் பொருட்களைச் சேகரித்து கொண்டு இன்று 25-08-2018 மாலை 5 மணியளவில் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கனாசேரி முகாமிற்கு விரைகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாணியம்பாடி நாம்தமிழர் தொகுதியின் சார்பாக கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சுற்றியுள்ள 40 கிராமங்கள் வெள்ளத்தில் பாதிப்பில் இருப்பதால் அவர்களுக்கு உதவ இன்று நிவாரண பொருட்களுடன் தொகுதி தலைவர் மற்றும் உறவுகள் சென்றுள்ளனர்.@NaamTamilarOrg @Naamtamilarvnb @Ezhil_Ravanan87 @vennithayus pic.twitter.com/rnLDkacOWN
— சிலம்பரசன் இராசேந்திரன் (@simbu_raj) August 25, 2018












Click it and Unblock the Notifications