ரூ26.50 லட்சம் காருடன் சீமானின் சொத்து ரூ.35.36 லட்சம்..மனைவி கயல்விழிக்கு ரூ.52.25 லட்சம் சொத்து
கடலூர்: நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ரூ.35.36 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், அதே நேரத்தில் தனியார் வங்கியில் ரூ. 8.97 லட்சம் கடன் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரது மனைவி கயல்விழி பெயரில் ரூ.52.25 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக ஒரே மேடையில் 234 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தும், அறிமுகம் செய்து வைத்தும் பேசிய சீமான், கடலூர் தொகுதியில் தாம் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

இந்நிலையில் சட்டசபைத் தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இன்று கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் உமா மகேஸ்வரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அதில் சீமான் தமக்கும் தனது மனைவிக்கும் உள்ள சொத்துகள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்துள்ளார். அதன் விவரம்:
-சீமானிடம் கையிருப்பாக ரூ.40ஆயிரமும், வங்கிகளில் பல்வேறு இருப்புகளாக ரூ. 81,176 உள்ளது.
-ரூ.26.50 லட்சம் மதிப்பில் ஒரு காரும், ரூ.4.50 லட்சம் மதிப்பில் மற்றொரு காரும் உள்ளது
-150 கிராம் எடையுள்ள தங்க நகைகள் உள்ளன. இவைகளின் மொத்த மதிப்பு ரூ.35,36,177 ஆகும்.
-அசையாச் சொத்துக்களான வீடு, நிலம் உள்ளிட்டவை ஏதும் இல்லை
-தனியார் வங்கியில் ரூ.8.97 லட்சம் கடன் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
-சீமான் தன்மீது 3 வழக்குகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சீமான் மனைவி கயல்விழி சொத்து விவரம்:
-கையிருப்பாக ரூ.35 ஆயிரம், பத்திரங்களில் முதலீடாக ரூ.80 ஆயிரம் உள்ளது
- வங்கிகளில் இருப்பாக ரூ.55ஆயிரம்..
-ரூ.16லட்சம் மதிப்புள்ள கார்,
-160 கிராம் எடையுள்ள தங்க நகைகள்..இதன் மதிப்பு ரூ.52,25,031 ஆகும்.
-அசையா சொத்தாக நிலம், வீட்டுமனையாக ரூ.29 லட்சம் மதிப்பில் சொத்து..இவைகளின் மொத்த மதிப்பு ரூ.81.25 லட்சமாகும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications