தள்ளுமுள்ளு, வாய் வார்த்தை, அடிதடியுடன் முடிவடைந்தது நடிகர் சங்கத் தேர்தல்!
சென்னை: காலை 7 மணிக்கு தொடங்கிய நடிகர் சங்கத் தேர்தல் சற்று முன்னர் மாலை 5 மணியுடன் நிறைவுற்றது. சற்றுமுன்னர் கிடைத்த தகவலின் படி சுமார் 2751 வாக்குகள் பதிவாகி இருப்பதாக நடிகர் சங்கத் தேர்தல் அதிகாரி பத்மநாபன் தெரிவித்து இருக்கிறார்.
கடைசியாக கிடைத்த தகவலின்படி 90 சதவீத வாக்குகள் பதிவாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 388 பேர் வாக்களிக்க முன்வரவில்லை என்று தேர்தல் அதிகாரி பத்மநாபன் தகவல் வெளியிட்டுள்ளார்.

24 செயற்குழு உறுப்பினர்கள் உட்பட 29 பதவிகளுக்கு போட்டி நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5 மணியுடன் தற்போது முடிவடைந்து இருக்கிறது.
மாலை 5 மணிவரை நடைபெற்ற இந்தத் தேர்தலின் முடிவுகள் இரவு 9 மணியளவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் இதுவரை நடிக, நடிகையர் வாக்களிப்பில் தபால் ஓட்டுக்களையும் சேர்த்து சுமார் 2751 வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் அதிகாரி பத்மநாபன் தெரிவித்து இருக்கிறார்.

மாலை 6 மணியளவில் ஓட்டுக்கள் எண்ணப்படும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்து இருப்பதால், இரவு 9 மணியளவில் முடிவு தெரிந்து விடும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ரஜினி,கமல், விஜய், சூர்யா தொடங்கி முன்னணி நடிகர்கள் பலரும் தங்கள் வாக்கைப் பதிவு செய்தனர்.நடிகையரில் கே.ஆர்.விஜயா, கவுதமி, வரலட்சுமி, ஜோதிகா என பழம்பெரும் நடிகையர் தொடங்கி இளம்நடிகைகள் பலரும் தங்கள் வாக்கை ஆர்வத்துடன் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சற்று நேரத்தில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கப்படும் என்று உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications