நான்கரை ஆண்டுகளாக வடிவேலுவை காணோம்!: ச.ம.கவினர் அதிரடி போஸ்டர்
நடிகர் சங்க கட்டிடத்தை காணோம் என்று பேட்டியளித்த நடிகர் வடிவேலுக்கு பதிலடி தரும் விதமாக கடந்த நான்கரை வருடங்களாக காணோம் என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
நடிகர் சங்க தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்து வருகிறது. இதில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், நாசர் தலைமையில் பாண்டவர் அணியும் போட்டியிடுகின்றனர். இரு அணியினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், மதுரையில் பேட்டியளித்த நடிகர் வடிவேலு, நடிகர் சங்கத்தை காணோம் அதைத்தான் தேடி கொண்டு இருக்கிறோம் என்று பேட்டியளித்தார்.

நடிகர் சங்கத்தை காணோம் என்று பேட்டியளித்த நடிகர் வடிவேலு மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நேரில் ஆஜராகவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த தியாகு என்பவர் நேற்று வடிவேலுவுக்கு எதிராக சென்னை நகரில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளார். அதில், கடந்த நான்கரை வருடங்களாக நடிகர் வடிவேலுவை காணோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தியாகு, நடிகர் சங்க உறுப்பினர் என்றும் அந்த உறுப்பினர் எண்ணும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2011ம் ஆண்டு திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த வடிவேலு விஜயகாந்த்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தார். இதனால் படவாய்ப்புகள் எதுவும் இன்றி சில ஆண்டுகள் வீட்டில் இருந்தார். அவர் ஹீரோவாக நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்கள் எதுவும் ஓடவில்லை. இதனாலேயே வடிவேலுவை காணவில்லை என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர் சமத்துவ மக்கள் கட்சியினர்.
நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் கட்சியினர் நுழைந்து போஸ்டர் ஒட்டியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. வடிவேலுவுக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த போஸ்டர் குறித்து நடிகர் வடிவேலுவின் ரசிகர்கள் போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர். வடிவேலுவுக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த போஸ்டர் குறித்து நடிகர் வடிவேலுவின் ரசிகர்கள் போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications