நடிகர் சங்கத் தேர்தல்... சரத்குமார் அணியில் போட்டியிடுவோர் யார் யார்?
திருச்சி: நடிகர் சங்கத் தேர்தலில் தமது அணியில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் செப்டம்பர் 30-ம் தேதி வெளியிடப்படும் என்றார் நடிகர் சங்கத்தின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.சரத்குமார்.
திருச்சியில் நாடக நடிகர்கள் சங்கத்தின் உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு கோரும் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று தனது அணிக்கு ஆதரவு கோரிய பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

தமிழகம் முழுவதும் நாடக நடிகர்களை மாவட்டம் வாரியாக சந்தித்து ஆதரவு கோரி வருகிறோம். எங்களுடைய அணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எங்களது அணியில் பொருளாளர் பதவிக்கு பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மகன் கண்ணனும், துணைத் தலைவர் பதவிக்கு நடிகர் சிம்புவும் போட்டியிடுகிóன்றனர்.
இதரப் பதவிக்கு போட்டியிடும் பெயர்கள் அடங்கிய வேட்பாளர் பட்டியல் வரும் 30-ம் தேதி வெளியிடப்படும். நாங்கள் நடிகர் சங்கத்தில் எப்போதும் அரசியலை புகுத்தியதில்லை.
எதிர் தரப்பு அணியைச் சேர்ந்தவர்கள் எங்களுக்கு எதிரான கருத்துகளை கூறி வருகின்றனர். அவர்கள் தெரிவித்த கருத்துகளுக்கு உரிய பதிலை அளித்துவிட்டோம்.
தேர்தல் ஸ்டண்ட்: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே -விடியலை தேடி என்ற பெயரில் பொதுமக்களை தற்போது நேரில் சந்திப்பது தேர்தல் ஸ்டண்ட் ஆகும்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக மக்களைச் சந்திக்காத ஸ்டாலின், தற்போது தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதை பொதுமக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார் சரத்குமார்.
இந்தக் கூட்டத்தில் நடிகர் சங்கச் செயலர் ஆர்.ராதாரவி, நடிகைகள் ராதிகா சரத்குமார், பாத்திமா பாபு, நடிகர்கள் ராம்கி, ஹம்சவர்த்தன், காளை, திருச்சி நாடக நடிகர் சங்கத் தலைவர் மஸ்தான் உள்ளிóடோர் பங்கேற்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications