நடிகர் சங்கத் தேர்தல்: விஷாலின் "பாண்டவர் அணிக்கு" ஆதரவு அளித்த பிரகாஷ்ராஜ், குஷ்பூ
சென்னை: நடிகர் விஷாலின் பாண்டவர் அணிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் குஷ்பூ ஆகியோர் நேரிடையாகவும் மறைமுகமாகவும் தங்கள்ஆதரவை அளித்துள்ளனர்.
இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் நேரிடையாக தனது ஆதரவை நடிகர் விஷால் அணிக்கு தெரிவித்திருக்கிறார். நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பூ தனது ஆதரவை வெளிப்படையாகத் தெரிவிக்காவிட்டாலும் மறைமுகமாக தனது ஆதரவு விஷால் அணிக்கே என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் இரு அணியினரும் தங்கள் அணிக்கு பம்பரமாகச் சுழன்று ஆதரவு திரட்டி வருகின்றனர்.

நடிகர் சங்கத் தேர்தல்
வரும் அக்டோபர் 18ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும், விஷால் தலைமையில் ஒரு அணியினரும் என இரண்டாகப் பிரிந்து தேர்தலை சந்திக்கவுள்ளனர். இதில் நடிகர் சரத்குமார் ஏற்கனவே 3 முறை நடிகர் சங்கத் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

விஷால் அணிக்கு பெருகும் ஆதரவு
ஏற்கனவே நடிகர் கமல் ஹாசன், விவேக் ஆகியோர் தங்கள் ஆதரவை விஷாலின் பாண்டவர் அணிக்கு தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர் பிரகாஷ் ராஜும் தனது ஆதரவை விஷால் அணிக்கே கொடுப்பதாக வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் இதைப் பற்றி மனந்திறந்து கூறியிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

மாற்றம் ஒன்றே மாறாதது
மாற்றம் ஒன்று தான் மாறாதது. ஒரு இளம் படை உள்ளே வருகிறது. அவர்களுக்கு நாம் இடம் கொடுத்தாக வேண்டும். புதிய இளைஞர்கள், புதிய சிந்தனைகள் வரும் போது தான் நாம் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும். அப்படி ஒரு மாற்றம் பல வருடங்களுக்குப் பிறகு வந்திருக்கிறது.

மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்
மாற்றம் வரும் போது பக்கத்தில் நிற்க வேண்டும், யாரும் மீதும் நான் கூறவோ, சண்டைப் போடவோ விரும்பவில்லை. தனிப்பட்ட முறையில் அனைவருமே எனக்கு நண்பர்கள் தான். என் படிப்பு, தொழில், மனசாட்சி இப்படி அனைத்துமே மாற்றம் தேவைப்படுகிறது என சொல்கிறது. இத்தனை வருடங்களாக நடக்காதது நடக்கும் என நினைக்கிறேன். சும்மா ஒரு அறிக்கைக் கொடுத்து நான் ஓட்டுப் போடுகிறேன் என நான் சொல்லமாட்டேன், மாற்றம் வரும் போது அதை என்னுடைய பொறுப்பாக எடுத்துக் கொண்டு அதற்கு நான் துணையாக நிற்பேன்" என கூறியிருக்கிறார்.

நடிகை குஷ்பூ
நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பூ தனது ஆதரவை வெளிப்படையாகத் தெரிவிக்காவிட்டாலும் மறைமுகமாக தனது ஆதரவு விஷால் அணிக்கே என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். தேர்தல் நடைபெற இன்னும் ஒருமாத காலம் உள்ளநிலையில் விஷாலின் பாண்டவர் அணிக்கு ஆதரவு பெருகிவருவது குறிப்பிடத்தக்கது.
சங்கத் தேர்தலில் ஜெயிக்கப்போவது நாட்டாமையா அல்லது சண்டக்கோழியா பொறுத்திருந்து பார்க்கலாம்....
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications