கமல் நன்றி மறந்தவர்...சிலம்பரசன் உண்மையான தமிழன் - டி.ராஜேந்தர்
சென்னை: நடிகர் கமலஹாசன் நன்றி மறந்தவர் ஆனால் எனது மகன் சிலம்பரசன் உண்மையான தமிழன் என்று நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக இயக்குநர் டி.ராஜேந்தர் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்.
நடிகர் சங்கத் தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் கமல் நடிகர் சங்கத்தின் பெயரை இந்திய நடிகர் சங்கம் என மாற்ற வேண்டும் என்று கூறினார்.
இந்த விவகாரத்தில் நடிகர் ராஜேந்தர் கமல் மீது கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

நடிகர் சங்கத் தேர்தல்
நடிகர் சங்கத் தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி தற்போது வரை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சற்று முன்னர் கிடைத்த தகவலின்படி மொத்தம் 2435 வாக்குகள் நேரடியாகவும், தபால் மூலமாகவும் பதிவாகி இருக்கிறது என்று தேர்தல் அதிகாரி பத்மநாபன் தெரிவித்து இருக்கிறார்.
மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும் என்றும் இரவு 9 மணிக்குள் முடிவு தெரிந்து விடும் என்றும் உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னணி நடிகர்கள்
ரஜினி,கமல், சூர்யா, விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் தொடங்கி முன்னணி நடிகர்கள் பலரும் தங்கள் வாக்கைப் பதிவு செய்து வருகின்றனர். நடிகைகளில் கே.ஆர்.விஜயா, ஜோதிகா, ராதிகா, சுகன்யா, வரலட்சுமி என்று பழம்பெரும் நடிகைகள் தொடங்கி இளம் நடிகைகள் பலரும் தங்கள் வாக்கை உற்சாகத்துடன் பதிவு செய்து வருகின்றனர். முன்னணி நடிக, நடிகையர் பலரும் வரிசையில் நின்று தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர் இதனால் அந்த வளாகம் முழுவதும் பரபரப்புடன் காணப்படுகிறது.

டி.ராஜேந்தர்
இயக்குனரும், தயாரிப்பாளருமான டி.ராஜேந்தர் தனது மகன் சிலம்பரசனுடன் வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் கமல் நடிகர் சங்கத்தை இந்திய நடிகர் சங்கமாக மாற்ற சொல்கிறாரே அவரின் கேள்விக்கு உங்கள் கருத்து என்ன என்று கேட்டனர்.

தமிழ் நடிகர்கள்
தமிழ் நடிகர்கள் மட்டும் தான் இங்கு வந்து வாக்களித்து வருகின்றனர் எந்த தெலுங்கு, கன்னட, மலையாள மற்றும் ஹிந்தி நடிகர்கள்களும் இங்கு வந்து வாக்களிக்க முன்வரவில்லை. அப்படியிருக்க கமல் இந்திய நடிகர் சங்கம் என்று பெயர் மாற்ற சொல்லியிருக்கிறார்.

நன்றி மறந்தவர்
தனது குருநாதர் பாலச்சந்தர் மறைவிற்கு கூட கமல்ஹாசன் வரவில்லை குருவிஷயத்தில் செய்நன்றி மறந்த கமல் நடிகர் சங்க விவகாரத்திலும் நன்றியை மறந்து விட்டார். அவரது படங்கள் பிரச்சினைகளில் சிக்கியபோது சரத் செய்த உதவியை அவர் மறந்து விட்டார்.

சிம்பு உண்மையான தமிழன்
நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி, தோல்வி என எது வந்தாலும் சிம்பு உண்மையான தமிழனாக தனது கொள்கையில் உறுதியாக இருக்கிறார் என்று டி.ராஜேந்தர் தெரிவித்தார். சிம்பு பேசும்போது ரஜினி கூறியதுபோல தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றினால் நல்லதுதான் என்று கருத்துக் கூறினார்.மேலும் தேர்தல் முடிந்து 2 அணிகளும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் அதனை தான் வரவேற்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications