சிம்பு நீக்கம் இல்லை- ராதிகாவுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் - நடிகர் சங்கம் அதிரடி
சென்னை: ஆபாசப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்புவை நீக்கமாட்டோம்; இந்த விவகாரத்தில் நாங்கள் ஏமாற்றியதாக ராதிகா தெரிவித்த விமர்சனத்துக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்புவோம் என்று நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.
ஆபாச பாடல் வெளியிட்டதால் நடிகர் சிம்பு பஞ்சாயத்தில் சிக்கியிருக்கிறார்.. அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தமக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சிம்புவும் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த நடிகை ராதிகா, சிம்பு விவகாரத்தில் நடிகர் சங்கம் ஏமாற்றிவிட்டது என கூறியிருந்தார். ஆனால் சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்க செயற்குழு கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் நாசர், பொதுச்செயலர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்டோர், பீப் பாடலுக்கு நாங்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறோம். அதே நேரத்தில் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக சிம்புவிடம் தனிப்பட்ட முறையில் பலரும் பேசினோம்.
ஆனால் சிம்பு தரப்பினர், நாங்கள் சட்ட ரீதியாக சந்தித்துக் கொள்கிறோம் என்றனர். இந்த பாடல் வெளியாகிவிட்டதால் மன்னிப்பு கேட்டுவிட்டால் பிரச்சனை முடிந்துவிடும்; அதன் பின்னர் நடிகர் சங்கம் இந்த விவகாரத்தை கையிலெடுக்க வாய்ப்பாக இருக்கும் என்றும் கூறிப் பார்த்தோம். அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இது இருப்பதால் எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலை இருக்கிறது.
உண்மை இப்படி இருக்க சிம்புவை ஏமாற்றிவிட்டதாக நடிகை ராதிகா விமர்சனம் செய்திருக்கிறார். இது குறித்து அவரிடம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்ப இன்றைய செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம் என்றனர்.
மேலும் சிம்புவை நடிகர் சங்கத்தில் நீக்க வேண்டும் என்று பல்வேறு கடிதங்கள் வந்துள்ளன; அதுபற்றி இன்றைய செயற்குழுவில் எதுவும் பேசவில்லை; சிம்புவை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கும் எண்ணமும் எங்களுக்கு இல்லை என்றும் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications