நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் அதிரடி சஸ்பென்ட்? மறுக்கும் நாசர்
சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் சரத்குமார் உள்ளிட்டோரை நீக்கி தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக செய்திகள் வெளியாகின.
நடிகர் சங்கத்தின் இந்த முடிவு தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று நடிகர் சங்கத் தலைவர் நாசர் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் சங்கத் தேர்தல்:
நடிகர் சங்கக் கட்டிடம் தொடர்பாக எழுந்த பிரச்சினை 3 முறை தலைவராக இருந்த சரத்குமாரின் மீது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கடந்த ஆண்டு நடந்த சங்கத் தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வென்று நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்புகளைக் கைப்பற்றினர்.
கணக்குகளை ஒப்படைக்கவில்லை:
விஷால், நாசர் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்று 6 மாதங்கள் கடந்த பின்னரும் கூட சரத்குமார் நடிகர் சங்கத்தின் கணக்கு வழக்குகளை ஒப்படைக்கவில்லை. இது குறித்து பலமுறை நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுத்தும் கணக்குகளை ஒப்படைக்க சரத்குமார் முன்வரவில்லை.
பலகோடி ஊழல்:
இந்நிலையில் கடந்த 3 ம் தேதி சரத்குமார் மீது பலகோடி ஊழல் செய்ததாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் நடிகர் சங்க அறக்கட்டளை சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.
சட்டப்படி சந்திப்பேன்:
இந்த புகாரை சட்டப்படி சந்திப்பேன் என்று சரத்குமார் தெரிவித்து இருந்தார். இது குறித்து அவர் மனைவி ராதிகா, நடிகர் சங்க அறக்கட்டளையில் என்ன பணம் இருந்தது? என்று கிண்டல் செய்திருந்தார்.
தற்காலிக நீக்கம்:
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில் சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் உள்ளிட்ட மூவரையும் நடிகர் சங்கத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த செய்தி உண்மையில்லை என்று நடிகர் சங்கத் தலைவர் நாசர் மறுப்புத் தெரிவித்திருக்கிறார். மேலும் இன்னும் எந்த முக்கிய முடிவுகளும், நடிகர் சங்கத்தில் எடுக்கப்படவில்லை என்றும் அவர் விளக்கமளித்திருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications