இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்... தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்
கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நாகை: கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த கோடியக்கரை மீனவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் அவர்களிடமிருந்த மீன்களை பறித்து சென்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்திலிருந்து ஏராளமான மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்களை அவர்கள் பிடித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இரும்பு ராடு, கம்பி உள்ளிட்ட பொருட்களை கொண்டு தாக்கியதில் நான்கு மீனவர்கள் படுகாயமடைந்தனர். மேலும் தமிழர்களின் படகுகளையும் இலங்கை கடற்கொள்ளையர்கள் சேதம் செய்தனர். இதனைத்தொடர்ந்து மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் கடற்கொள்ளையர்கள் அள்ளிச்சென்றனர்.

இதனைத்தொடர்ந்து மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் சக மீனவர்கள் அவர்களை மீட்டு அழைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தால் தவித்து வரும் தாங்கள் தற்போது கடற்கொள்ளையர்களின் பிடியிலும் சிக்கி தவிப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications