அட அப்ரண்டிசுகளா..... வீரவணக்கத்துக்கு அர்த்தம் தெரியாமல் போனதன் விபரீதத்தை பாருங்களே
சென்னை: தமிழக அரசியலில் கட்சி தலைமைகளை ஈர்ப்பதற்கு விதம் விதமாக சுவரொட்டி அடிக்கும் கலாசாரம் காலம் காலமாக இருந்து வருகிறது.. இந்த வகையில் ஜல்லிகட்டு நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 'ஆர்வகோளாறுகள்' அடித்த ஒரு போஸ்டர் வாசகங்கள் பெரும் விபரீதத்தை ஏற்படுத்திவிட்டது.
ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி சிலர் போர்க்கொடி தூக்கினர். இவர்களது வாதங்களின் அடிப்படையில் உச்சநீதிமன்றமும் சில ஆண்டுகளுக்கு முன்னர் தடை விதித்தது.
மேலும் மத்திய அரசும் கரடி, சிங்கம், புலிகளைப் போல காட்சிபடுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் காளைகளை சேர்த்தது. இதனால் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை தமிழகத்தில் ஏற்பட்டது. ஆனால் சில நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

கடந்த ஆண்டு இந்த நிபந்தனைகளை முழுமையாக கடைபிடிக்கவில்லை எனக் கூறி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. நடப்பாண்டிலாவது ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின.
இதனை ஏற்று மத்திய அரசும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்த அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாகப்பட்டினத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்றுதான் பெரும் விபரீதத்தை ஏற்படுத்திவிட்டது.
அந்த போஸ்டரின் தலைப்பே "ஜல்லிக்கட்டு வீரவணக்கங்கள்"
அத்துடன் நிற்கவில்லை அந்த ஆர்வகோளாறுகள்...
தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிகட்டுக்கு அனுமதி வழங்கிய 'உலகத் தலைவன்' மாண்புமிகு பிரதமர் மோடிஜி, மாண்புமிகு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவேட்கர், பெருமுயற்சி எடுத்து வெற்றிகண்ட குமரித் தங்கம், வீரத் தமிழன் பொன்னார் அவர்களுக்கு 'நன்றியை'யும் வீரவணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று போஸ்டர் அடித்து ஊரெங்கும் ஒட்டிவிட்டனர்.
இவர்கள் "வீர" "வணக்கங்கள்" என்ற அர்த்தத்தில் போஸ்டர் அடித்தாலும் "வீரவணக்கம்" என்பது இறந்தவர்களுக்கு செலுத்துகிற அஞ்சலி என்பதை புரியாமல் அடித்துவிட்டால் பெரும் அதிர்ச்சியில் உறைந்துபோயினர் பொதுமக்கள்!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications