கனமழை: 2வது நாளாக காரைக்கால், நாகை, திருவாரூரில் விடுமுறை

Subscribe to Oneindia Tamil

Nagai, Thiruvarur dist Schools Holiday due to Rain
நாகப்பட்டினம்: வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம், புதுவையில் கனமழை நீடித்து வருகிறது. இதனால் காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் தமிழகக் கடல் பகுதிக்கு இடையே தென் மேற்கு வங்கக் கடலில் அண்மையில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. இது வலுவடைந்து தற்போது தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.

இது அடுத்த சில நாள்களுக்குள் புயல் சின்னமாகவும் மாறவும் வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புயல் சின்னம் வலுவடையும் போதுதான், அது எந்தத் திசையை நோக்கி நகரும் என்பது தெரிய வரும்.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால், தமிழகத்தின் நாகப்ப்ட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+