சூப்பர் நியூஸ்.. இன்று வேளாங்கண்ணி பேராலயம் கொடியேற்றம் .. ரயில்வே நிர்வாகத்தின் சர்ப்ரைஸை பாருங்க
நாகை: இன்று வேளாங்கண்ணி பேராலய பெருவிழாவையொட்டி, ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. இது பக்தர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
வருடா வருடம் இந்த பேராலயத்தில் பெருவிழா நடப்பது வழக்கம்.. அந்தவகையில், ஆகஸ்ட் மாதம் 29 -ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி 10 நாள்கள் விழா நடைபெறும்...

இந்த நாள்களில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல நூறு கி.மீ. தூரம் நடைபயணமாகவே அன்னையின் அருளாசியை பெற திரண்டு வருவார்கள்.. ஆனால், கடந்த 2 வருடமாகவே, கொரோனா காரணத்தினால், பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்த்து.
பக்தர்கள்: இந்த வருடம் எந்த தடையும் இல்லாத சூழலில், பக்தர்கள் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்தும் திரண்டு வந்துள்ளனர்.. இன்று மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கொடியை புனிதம் செய்து வைக்கிறார். இதையடுத்து கொடியேற்றமும் நடைபெற உள்ளது.
இதையடுத்து, பயணிகளின் வசதிக்காக, சிறப்பு பஸ்களை போலவே சிறப்பு ரயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சில, கூடுதல் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது... மேலும் சில ரெயில்களின் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரம் இதுதான்:
தஞ்சாவூர்: "தஞ்சாவூர் டெமு ரெயில் (06835) இன்று முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை திருச்சி ஜங்ஷன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருச்சி - வேளாங்கண்ணி முன்பதிவில்லா டெமு ரெயில் (06866) திருச்சி ஜங்ஷனில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
வேளாங்கண்ணி- தஞ்சாவூர் முன்பதிவில்லா டெமு ரயில் (06863)வேளாங்கண்ணியில் இருந்து அதிகாலை 3.05 மணிக்கு புறப்பட்டு 5.35 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.
விழுப்புரம்: விழுப்புரம்- நாகப்பட்டினம்- விழுப்புரம் முன்பதிவில்லா டெமு ரயில் (06865/ 06864) இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை, செப்டம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரு வழித்தடத்திலும் இயக்கப்பட உள்ளன. அதன்படி விழுப்புரத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 12.50 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும். மறு வழித்தடத்தில் நாகப்பட்டினத்தில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டு அன்று மாலை 5.40 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.
நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி முன்பதிவில்லா டெமு ரெயில் (06857/ 06858) (06868/ 06867) நாளை முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை இயக்கப்படுகிறது. இதில், வேளாங்கண்ணி-நாகப்பட்டினம் (06858) ரெயில் வேளாங்கண்ணியில் இருந்து பிற்பகல் 12.35 மணிக்கு புறப்பட்டு நாகப்பட்டினத்தை பிற்பகல் 12.55 மணிக்கு சென்றடையும். மறு வழித்தடத்தில் நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி (06857) ரயில், நாகப்பட்டினத்தில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
நாகப்பட்டினம்: இதேபோல, வேளாங்கண்ணி- நாகப்பட்டினம் (06868) ரெயில், வேளாங்கண்ணியில் இருந்து பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட்டு, நாகப்பட்டினத்துக்கு பிற்பகல் 2.20 மணிக்கும், நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி ரெயில் (06867) நாகப்பட்டினத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு, வேளாங்கண்ணிக்கு பிற்பகல் 3.50 மணிக்கும் சென்றடையும்" என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications